பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 - - பெரிய புராண விளக்கம் . 9

சென்னி வைத்துடன் சேர்வுறும்

விருப்பினிற் சிறந்தார்.'

அன்ன . அந்தத் திருநீலநக்க நாயனார் அத்தகைய. திருநீலநக்க நாயனார்: தோன்றா எழுவாய். தன்மையில் . பான்மையோடு: உருபு மயக்கம். அமர்ந்து - சாத்த மங்கையில் தங்கிக் கொண்டு. இனிது . இனிமையோடு. ஒழுகும் - தம்முடைய இல்லற வாழ்க்கையை நடத்தி வரும். அந்நாளில் - அந்தக் காலத்தில். மன்னு - புகழோடு நிலைபெற்று விளங்கும். பூந்தராய் - பூந்தரா யாகிய சீகாழியில். வரு. திருவவதாரம் செய்தருளி வரும். மறை - வேதியரும்; திணை ம ய க் கம். ப் : சந் தி. பிள்ளையார் - ஆளுடைய பிள்ளையாரும் ஆகிய திரு ஞான சம்பந்த மூர்த்தி நாயனாருடைய. பெருமை - பெருமையை. பன்னி - பல தடவைகளும் எடுத்துக் கூறி. வையகம் - இந்த உலகத்தில் வாழும் மக்கள்: இடஆகு பெயர். போற்றிட - வாழ்த்துமாறு. மற்று : அசைநிலை. அவர்-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருடைய. பாதம் - திருவடிகளை ஒருமை பன்மை மயக்கம். சென்னி வைத்து - தம்முடைய தலையின் மேல் வைத் துக் கும்பிட்டு. உடன் - அந்த நாயனாரோடு. சேர்வுறும் . சேரும். விருப்பினில் விருப்பத்தில். சிறந்தார் - தலை சிறந்து விளங்கினார். . -

பின்பு வரும் 23 - ஆம் செய்யுளின் கருத்து வருமாறு :

! நல்ல குணங்களில் மேம்பாட்டை அடைந்து விளங்கும் அத்தகைய நிலைமையில் வாழ்ந்து வருபவராகிய அந்தத் திருநீலநக்க நாய னார் அவ்வாறு வாழ்ந்து வரும் அந்தக் காலத்தில் இந்த மண்ணுலகத்தில் வாழும் மக்கள் தாங்கள் முன் பிறவியில் புரிந்த பெரியதாக இருக்கும்

பயனைப் பெறுமாறு இந்தச் செந்தமிழ் நாட்டில்

உள்ள ந ல் ல சி. வத் த ல ங் க வரி ல் திருக்கோயில் கொண்டு எ முந் த ரு விரி யி ரு க் கு ம் ஆகாயத்தில் விளங்கும் கங்கை நீரைத் தங்க வைத்திருக்கும் சடா