பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநீல நக்க நாயனார் புராணம் 345 பாரத்தைத் தம்முடைய தலையின் மேற் பெற்றவராகிய சிவபெருமானாரை வணங்குவதற்காக அந்த நாயனார் அடைபவராகி சண்பையாகிய சீகாழியை ஆட்சி புரியும் அரசராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும் திருநீல நக்க நாயனார் வாழ்ந்து கொண்டிருக்கும் சாத்த மங்கைக்கு எழுந்தருளி வந்து சேர்ந்தார். பாடல் வருமாறு : -

பண்பு மேம்படு கிலைமையார்

பயிலும் அப்பருவம் மண்பெ ருந்தவப் பயன்பெற

மருவுகற் பதிகன் விண்பி றங்குநீர் வேணியார்

தம்ைத்தொழ அணைவார் சண்பை மன்னரும் சாத்தமாங்

கையில்வந்து சார்ந்தார்.’ - பண்பு - நல்ல குணங்களில்; ஒருமை பன்மை மயக்கம். மேம்படு . மேம்பாட்டை அடைந்து விளங்கும். நிலைமை யார் . அத்தகைய நிலைமையில் வாழ்ந்து வருபவராகிய அந்தத் திருநீலநக்க நாயனார், பயிலும் . அவ்வாறு வாழ்ந்து வரும். அப்பருவம் - அந்தக் காலத்தில். மண் - இந்த மண்ணுலகத்தில் வாழும் மக்கள்: இடஆகு பெயர். பெரும் - தாங்கள் முற்பிறவியில் புரிந்த பெரியதாக இருக்கும். தவப்பயன் - தவத்தினுடைய பிரயோசனத்தை. பெற - அடையுமாறு. மருவு - இந்தச் செந்தமிழ் நாட்டில் உள்ள. நல்.நல்ல. பதிகள் - சிவத்தலங்களில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும்; ஆகு பெயர். விண் - ஆகாயத்தில். பிறங்கு - விளங்கும். நீர் - கங்கையாற்றில் நீரைத் தங்க வைத்திருக்கும். வேணியார் தமை - சடா பாரத்தைத் தம்முடைய தலையின்மேற் பெற்றவராகிய சிவபெருமானாரை. தமை : இடைக்குறை. தம் : அ சை திலை. த் : சந்தி. தொழ - வணங்குவதற்காக. அணை பெ. புரா - 9 - 16 義> - -