பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 பெரிய புராண விளக்கம் . 9

வார் . அடைபவராகி; முற்றெச்சம், சண்பை - சண்பை யாகிய சீகாழியை. மன்னரும் . ஆட்சி புரிந்தருளும் அரசராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும். சாத்தமங்கையில் - சாத்தமங்கைக்கு உருபு மயக்கம், வந்து - எழுந்தருளி வந்து. சார்ந்தார் - சேர்ந்தார்.

பிறகு உள்ள 24 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு :

நெடுங்காலமாக உள்ள சீர்த்தியைப் பெற்ற திருநீல கண்டத்து யாழ்ப்பெரும்பான நாயனார், இதழ்களைப் பெற்ற மலர்கள் நிலவும் கூந்தலைப் பெற்ற தம்முடைய தர்மபத்தினியாராகிய விறலியார் தம்மோடு வரத் திருத் தொண்டர்கள் கூட்டமாகக் கூடியிருக்கும் அந்தப் பெருமையைப் பெற்று விளங்கும் கூட்டத்தோடும் புகலியாகிய சீகாழியில் வாழும் மக்களுடைய தலைவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தம்முடைய ஊருக்குப் பக்கத்தில் எழுந்தருளி வந்த பான்மையைக் கேள்விப்பட்டுத் தம்முடைய திருவுள்ளத்தில் மகிழ்ச்சியைப் பெற்ற அந்தத் திருநீலநக்க நாயனார். பாடல் வருமாறு :

கீடு சீர்த்திரு நீலகண் டப்பெரும் பாணர் தோடு லாம்குழல் விறலியார் உடன்வரத் தொண்டர் கூடும் அப்பெரும் குழாத்தொடும் புகலியர் பெருமான் மாடு வந்தமை கேட்டுளம் மகிழ்நீல கக்கர்.' - - இந்தப் பாடல் குளகம். நீடு - நெடுங்காலமாக உள்ள. சீர் - சீர்த்தியைப் பெற்ற. த் : சந்தி. திருநீலகண்டப் பெரும்பாணர் - திருநீலகண்டத்து யாழ்ப்பெரும்பாண நாயனார். தோடு - இதழ்களைப் பெற்ற மலர்கள்; ஆகு. பெயர். தோடு : ஒருமை பன்மை மயக்கம். உலாம் . திலவும். குழல் . கூந் த ைல ப் பெற்ற. விறலியார் . தம்முடைய தர்மபத்தினியாராகிய விறலியார். விறலி . சத்துவம் பட ஆடிப் பாடுகிறவள். உடன்வர - தம்மோடு அர. த் : சந்தி. தொண்டர் - சிவபெருமானுடைய திருத் தொண்டர் ககன்; ஒருமை பன்மை மயக்கம்: கூடும் .