பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநீலநக்க நாயனார் புராணம் 密星7

கூட்டமாகக் கூ டி யி ரு க்கு ம். அப்பெரும் - அ ந் த ப் பெருமையைப் பெற்று விளங்கும். குழாத்தொடும் - கூட்டத்தோடும். புகலி ய ர் - புகலியாகிய சீகாழியில் வாழும் மக்களுடைய ஒருமை பன்மை மயக்கம். பெருமான் - தலைவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். மாடு வந்தமை . தம்முடைய ஊருக்குப் பக்கத்தில் எழுந்தருளி வந்த பான்மையை, கேட்டு - கேள்விப்பட்டு, உளம் . தம்முடைய திருவுள்ளத்தில்: இடைக்குறை. மகிழ் - ம கி ழ் ச் சி ைய ப் பெற்ற முதல் நிலைத் தொழிற் பெயர். நீலநக்கர் - திருநீலநக்க நாயனார். - - r

அடுத்து வரும் 25 - ஆம் செய்யுளின் கருத்து வருமாறு :

'அவ்வாறு திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தம்முடைய ஊருக்குப் பக்கத்தில் எழுந்தருளி வந்த செய்தியைக் கேள்விப்பட்ட அந்தச் சமயத்திலேயே அந்தத் திருநீலநக்க நாயனார் தம்முடைய திருவுள்ளத்தில் பெருகி எழுந்த மகிழ்ச்சியினால் கிளர்ச்சியை அடைந்து இதழிகளைக் கொண்ட மலர் மாலைகளையும், துவசங் களையும் தொங்கவிட்டு அலங்காரத்தைப் புரிந்து தோரணங்களை நட்டு வைத்து நீளமாக உள்ள நடைப் பந்தலை அமைத்து தம்முடைய நல்ல உறவினர்கள் கூடிய கூட்டத்தையும் தம்மோடு அழைத்துக் கொண்டு வந்து தாமும் முன்னால் அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருக்கு எதிரில் சென்று வரவேற்பதற்காக எழுந்து சென்றார். பாடல் வருமாறு : -

கேட்ட அப்பொழு தேபெரு மகிழ்ச்சியிற் கிளர்ந்து தோட்ட லங்கலும் கொடிகளும்

புனைந்து தோரணங்கள் காட்டி நீள்கடைக் காவனம்

இட்டுகற் சுற்றத்