பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 பெரிய புராண விளக்கம் - 9

திட்டமும் கொடு தாமும்முன் எதிர்கொள எழுந்தார்.'

கேட்ட - அவ்வாறு திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தம்முடைய ஊராகிய சாத்தமங்கைக்குப் பக்கத்தில் எழுந்தருளி வந்த செய்தியைக் கேள்விப்பட்ட. அ ப் பொழுதே - அ க் த ச் சமய த் தி லே யே. பெரு - அ ந், த த் தி ரு நீ ல ந க் க ந | ய ன ர் தம் முடைய திருவுள்ளத்தில் பெருகி எழுந்த மகிழ்ச்சியில் - மகிழ்ச்சியினால் உருபு மயக்கம். கிளர்ந்து - கிளர்ச்சியை அன்டந்து. தோட்டு - இதழ்களை பெற்ற ஒருமை பன்மை மயக்கம். அல்ங்கலும் - மலர் மாலைகளையும்; ஒருமை பன்மை மயக்கம். கொடிகளும் - துவசங்களையும். புனைந்து - தொங்கவிட்டு அலங்காரத்தைப் புரிந்து. தோரணங்கள் - தோரணங்களை. தோரணம் - மாவிலை களையும், தென்னங் குருத்துக்களையும், மலர்களையும் கட்டித் தொங்க விட்டது. நாட்டி - நட்டு விைத்து. நீள் . நீளமாகிய. நடைக்காவணம் - நடைப் பந்தலை, மக்கள் நடக்கும் போது நிழல் தரும் பந்தல். இட்டு அமைத்து. நல் - நல்ல. சுற்றத்து - தம்முடைய உறவினர்கள்; திணை மயக்கம். சட்டமும் - கூடிய கூட்டத்தையும். கொடு - அழைத்துக் கொண்டு வந்து. தாமும் என்றது. திருநீலநக்க நாயனாரை. முன் - முன்னால், எதிர்கொள அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருக்கு எதிரில் சென்று. வரவேற்பதற்காக கொள: இடைக்குறை. எழுந்தார் . எழுந்து சென்றார். .

பிறகு வரும் 24-ஆம் பாடலின் கருத்து வருமாறு :

அவ்வாறு அந்தத் திருநீலநக்க நாயனார் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரை வரவேற்கும் பொருட்டுப் போய் அந்த ஆளுடைய பிள்ளையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் எழுந்தருளிச் செல்லும் திருத் தொண்டர்களுடைய தி ரு க் கூட்ட த் தோ டு கலந்து