பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநீலநக்க நாயனார் புராணம் 身莎幕

பிறகு வரும் 39 - ஆம் செய்யுளின் கருத்து வருமாறு : 'அவ்வாறு தமக்கு முன்னால் நின்று கொண்டிருந்த அயவந்தி ஈசுவரருடைய பக்தராகிய திருநீலநக்க நாயனாரைப் பார் த் துத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார், *திருநீலகண்டத்து யாழ்ப்பெரும்பான நாயனாருக்கு இன்றைக்குத் தங்குவதற்காக ஓர் இடத்தை உம்முடைய திருமாளிகையில் வழங்கியருளுவீராக!' என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்ய நன்றாக இன்பத்தை அடைந்து தம்முடைய திருமாளிகையில் நடுவில் உள்ள யாக சாலைத் திண்ணையின் பக்கத்திற்குப் போய் அந்தத் திருநீல கண்டத்து யாழ்ப்பெரும்பாண நாயனாருக்கு அழகிய வேதியராகிய அந்தத் திருநீலநக்க நாயனார் ஒர் இடத்தை வழங்கியருளினார். பாடல் வருமாறு :

1 கின்ற அன்புரை, கீலகண்

டப்பெரும் பாணர்க் கின்று தங்கஓர் இடம்கொடுத்

தருளுவீர்.” என்ன கன்றும் இன்புற்று நடுமனை

வேதியின் பாங்கர்ச் - சென்று மற்றவர்க் கிடம்கொடுத் தனர்திரு மறையோர்.' நின்ற - அவ்வாறு த ம க் கு மு ன் னா ல் நின்று. கொண்டிருந்த. அன்பரை - அயவந்தி ஈசுவரருடைய பக்தராகிய திருநீலநக்க நாயனாரைப் பார்த்துத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். நீலகண்டப் பெரும்பாணர்க்கு. திருநீல கண்டத்து யாழ்ப்பெரும்பாண நாயனாருக்கு. . இன்று - இன்றைக்கு, தங்க - தங்குவதற்காக ஒர் இடம் . உம்முடைய திருமாளிகையில் உள்ள ஒர் இடத்தை. கொடுத்தருளுவீர் - வழங்கியருளுவீராக என்ன . என்று. திருவாய் மலர்ந்தருளிச் செய்ய. நன்றும் . நன்றாக, 'உம்மை வேண்டாவழி வந்தது. இன்புற்று - ஆனந்தத்தை