பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநீலநக்க நாயனார் புராணம் . asr

ஆங்கு - திருநீலநக்க நாயனாருடைய திருமாளிகையில் உள்ள அந்த இடத்தில் விளங்கும். வேதியில் - யாகசாலைக் குண்டத்தில். அறாத - எப்போதும் அவியாமல் உள்ள. செந்தி. சிவந்த நிறத்தைப் பெற்று விளங்கும் நெருப்பு. வலம்சுழிவுற்று - வலமாகச் சுழித்துக் கொண்டு. ஓங்கி - மேல் நோக்கி ஓங்கி. முன்னையில் - முன்பு இருந்ததைக் காட்டிலும். ஒரு படித்தன்றி - ஒருவகையில் உள்ள . தல்லாமல் பல வகையாக ஏ : அசைநிலை ஒளிரபிரகாசத்தை வீச. த் : சந் தி. தாங்கு தம்முடைய திருமார்பில் தரிக்கும். நூலவர் - பூனுரலைப் பெற்ற வராகிய அந்தத் திருநீலநக்க நாயனார். மகிழ்வுற . மகிழ்ச்சியை அடையுமாறு: ச் : சந்தி. சகோட யாழ்த் தவைலர் - சகோடயாழினுடைய தலைவராகிய திருநீல கண்டத்து யாழ்ப்பெரும்பாண நாயனார். பாங்கு - தம் முடைய பக்கத்தில். பாணியாருடன்-தம்முடைய தர்மபத்தி னியாராகிய பாணினியாரோடு: பாணருடைய மனைவி. யார்: விறலியார் சத்துவம் பெற ஆடிப்பாடுகிற பெண் மணி. அருளால்-அயவந்தி ஈசுவரர் வழங்கிய திரு.அருளால். பள்ளி கொண்டார் - படுக்கையில் படுத்துக் கொண்டார்.

பிறகு உள்ள 32 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு : அன்று இரவு நேரத்தில் திருநீலகண்டத்து யாழ்ப் பெரும்பாண நாயனார் தம்முடைய பத்தினியார்ாகிய, விறலியாரோடு படுக்கையில் படுத்துக் கொண்ட பிறகு கவுண்டின்ய கோத்திரத்தில் பிறந்த வேதியர்களுக்குத் தலைவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் மதுரை மாநகரத்திலிருந்து எழுந்தருளுபவராகிச் சாத்தமங்கையில் அன்ங்கும் அயவந்தி என்னும் திருக்கோயிலில் விரும்பி எழுந்தருளியுள்ள பிறைச்சந்திரனைத் தன்னுடைய த ைல யி ன் மே ல் அணி ந் தவ னா கி ய அயவந்தி னை யும், திருநீலநக்க நாய னா ைர - ம் சிறப்பாக எடுத்துச் சொல்லி சொற்சுவை, பொருட்சுவை பொங்கி எழும் செந்தமிழ் மொழியில் அமைந்த ஒரு.