பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

艺葛8 பெரிய புராண விளக்கம் , 9

திருப்பதிகமாகிய மாலையை அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் அணிந்தார். பாடல் வருமாறு :

கங்கு லிற்பள்ளி கொண்டபின் கவுணியர்க் கிறைவர் அங்கு கின்றெழுந் தருளுவார்

அயவந்தி அமர்ந்த திங்கள் சூடியை நீலகக் கரைச்சிறப் பித்தே பொங்கு செந்தமிழ்த் திருப்பதி

கத்தொடை புனைந்தார்.' கங்குலில் - அன்று இரவு நேரத்தில். பள்ளி கொண்ட பின் - அந்தத் தி ரு நீ ல க ண் - த் து யாழ்ப்பெரும்பாண நாயனார் தம்முடைய பத்தினியாராகிய விறலியாரோடு படுக்கையில் படுத்துக் கொண்ட பிறகு. கவுணியர்க்கு - கவுண்டின்ய கோத்திரத்தில் பிறந்த வேதியர்களுக்கு. இறைவர் - தலைவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். அங்கு நின்று - அந்த மதுரை மாநகரத்தி லிருந்து. எழுந் த ரு ளு வார் - எழுந்தருளுபவராகி. அயவந்தி - சாத்தமங்கையில் உள்ள அயவந்தி என்னும் திருக்கோயிலில். அமர்ந்த - எழுந்தருளியுள்ள. திங்கள் சூடியை - பிறைச் சந்திரளைத் தன்னுடைய தலையின்மேல் அணிந்தவனாகிய அயவந்தி ஈசுவரனையும். நீலநக்கரை - திருநீலநக்க நாயனாரை. ச் : சந்தி. சிறப்பித்து - சிறப் பாக எடுத்துச் சொல்லி. ஏ : அசைநிலை. பொங்கு - சொற்சுவை, பொருட்சுவை பொங்கி எழும். செந்தமிழ். செந்தமிழ் மொழியில் அமைந்த. த் : சந்தி. திருப்பதிகத் தொடை - திருப்பதிகமாகிய மாலையை. புனைந்தார் . அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் அணிந்தார்.

அவ்வாறு திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் . திருநீலநக்க நாயனாரைச் சிறப்பித்துப் பஞ்சமப் பண்ணில் பாடியருளிய பாசுரங்கள் வருமாறு: