பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 - பெரிய புராண விளக்கம் - 9

அதிக கண்பினை நீலகக்

கருக்களித் தருளி எதிர்கொ ளும்பதி களில் எழுங்

தருளினார் என்றும் புதிய செந்தமிழ்ப் பழமறை மொழிந்தபூ சுரனார்.' பதிக - அவ்வாறு அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனர்ர் பாடியருளிய திருப்பதிகமாகிய, நான்மலர் கொண்டு - அன்றலர்ந்த மலரைக் கொண்டு. தம் - தம்முடைய. பி ரா ன் - த ைல வ ன கி ய அயவந்தி ஈசுவரனுடைய. கழல் - .ெ வ ற் றி க் கழலைப் பூண்டு கொண்டு விளங்கும் திருவடிகளை; ஆகுபெயர். பரவி - வாழ்த்தி வணங்கி விட்டு. அதிக - மிகுதியாக விளங்கும்: நண்பினை - நட்பை. நீலநக்கருக்கு - அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் அந்தத் திருநீல நக்க நாயனாருக்கு அளித்தருளி - வழங்கியருளி. என்றும் . எல்லாக் காலங்களிலும்; ஒருமை பன்மை மயக்கம். புதிய புதியவை ஆகிய செந் த மி ழ் - செந்தமிழ் மொழியில் அமைந்த. ப் : சந்தி. பழமறை . பழைய வேதமாகிய திருப்பதிகங்களை உவம ஆகுபெயர். மொழிந்த - திருவாய் மொழிந்தருளிய. பூசுரனார் . அந்தணராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். பூசுரன் - பூமியில் வாழும் தேவன். எதிர் - தங்களுக்கு எதிரில். கொளும் - பக்தர்களைக் கொண்டு விளங்கும்: இடைக்குறை. பதிகளில் - சிவத்தலங்களுக்கு; உருபு மயக்கம், எழுந்தருளினார் - எழுந்தருளிச் சென்றார்.

பிறகு உள்ள 34 - ஆம் பாடலின் கருத்து வருமாறு : அவ்வாறு ஆளுடைய பிள்ளை யாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பல சிவத்தலங்களுக்கு எழுந் தருளிச் செல்ல அந்த அயவந்தி ஈசுவரருடைய திருத் தொண்டராகிய திருநீல நக்க நாயனார் பிறகு தம்மை உந்தித் தள்ளும் பக்தியோடு திருஞான சம்பந்த மூர்த்தி