பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநீலநக்க நாயனார் புராணம் 雳姆夏

நாயனாரோடு கொண்ட நட்பும் தவிர்க்க முடியாதவை என்றாலும் வள்ளலாராகிய அந்தத் திருஞான சம்பத்த மூர்த்தி நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்த வார்த்தைகளை வலிந்து தள்ள முடியாமையினால் தம்முடைய திருவுள்ளத்தை அந்தச் சாத்தமங்கைக்கு உடனே போகச் செய்து திரும்பி வந்து ஒருவாறு அந்தச் சாத்தமங்கையில் அந்தத் திருநீல நக்க நாயனார் தங்கிக் கொண்டிருந்தார்." பாடல் வருமாறு :

பிள்ளை யார்எழுந் தருனஅத்

தொண்டர்தாம் பின்பு தள்ளும் அன்புடன் கேண்மையும்

தவிர்ப்பில் எனினும் வள்ள லார் திரு வருளினை வலியமாட் டாமை உள்ள்ம் அங்குடன் போக்கிமீண் . டொருவகை இருந்தார்." பிள்ளையார்.அவ்வாறு ஆளுடைய பிள்ளையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். எழுந்தருள - பல சிவத்தலங்களுக்கு எழுந்தருளிச் செல்ல. அத்தொண்டர் தாம் - அந்த அ ய வ ந் தி ஈ. சு வ ர ரு ைட ய திருத் தொண்டராகிய திருநீலநக்க நாயனார். தாம் : அசை நிலை. பின்பு - பிறகு. தள்ளும் - தம்மைப் பிடர்.பிடித்து உந்தித் தள்ளும். அன்புடன் - பக்தியோடு. கேண்மையும். திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரோடு பூண்ட நட்பும். தவிர்ப்பில் - தவிர்க்க முடிதலை இல்லாதவை; தவிர்க்க முடியாதவை. எனினும் - எ ன் றாலு ம்: இடைக்குறை. வள்ளலார் - வள்ளலாராகிய அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். திருவருளினை - திருவாய் மலர்ந் தருளிச் செய்த வார்த்தைகளை ஆகுபெயர். வலிய வலிந்து தள்ளுவதற்கு. மாட்டாமை - முடியாமையினால். உள்ளம் - தம்முடைய திருவுள்ளத்தை. அங்கு - அந்தச் சாத்தமங்கைக்கு. உடன் - உடனே. போக்கி-போகச்

பெ. புரா. - 17 -