பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

”感伤感, பெரிய புராண விளக்கம் .9

செய்து. மீண்டு - திரும்பி வந்து. ஒருவகை - ஒருவாறு. இருந்தார் . அந்தச் சாத்த மங்கையில் அந்தத் திருநீல நக்க நாயனார் தங்கிக் கொண்டிருந்தார். . . .

அடுத்து உள்ள 35 - ஆம் பாடலின் கருத்து வருமாறு . அவ்வாறு அந்தத் திருநீலநக்க நாயனார் சாத்த மங்கையில் தங்கிக் கொண்டிருந்த காலத்தில் அந்த மறைய வராகிய திருநீலநக்க நாயனார் முன்பு செய்ததைப் போல தாம் விழையும் கெடுதல் இல்லாத அந்த அயவந்தி சசுவரருக்குப் பூசை முதலாக உள்ள செயல்கள் இடந் தோறும் சிறப்பைப் பெற்று விளங்க இடபவாகனத்தின் மேல் எழுந்தருள்பவராகிய பிரமபுரீசருடைய புதல் வராகும் அழகிய அந்தணச் சிறுவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தம்முடைய செந்தாமரை மலர் களைப் போன்ற திருவடிகள் பல சிவத்தங்களில் அமைந்த உணர்ச்சியோடும் வாழ்ந்து வந்தார். பாடல் வருமாறு :

மேவும் நாளில்அவ் வேதியர் . முன்புபோல் விரும்பும்

தாவில் பூசனை முதற்செய்கை

தலைத்தலை சிறப்பச் - சேவின் மேலவர் மைந்தராம் திருமறைச் சிறுவர் பூவ டித்தலம் பொருக்திய

உணர்வொடும் பயின்றார்." .

மேவும் - அவ்வாறு அந்தத் திருநீலநக்க நாயனார் சாத்தமங்கையில் விரும்பித் தங்கிக் கொண்டிருந்த, நாளில் . காலத்தில். அவ்வேதியர் - அந்த மறைய வராகிய திருநீல நக்க நாயனார். முன்புபோல் - முன்பு செய்ததைப் போல. விரும்பும் - தாம் விழையும். தா. கெடுதல். இல் - இல்லாத கடைக்குறை. பூசனை அந்த அயவந்தி சசுவரருக்குப் பூசை. முதல் - முதலாக உள்ள. செய்கை . செயல்கள்: ஒருமை பன்மை மயக்கம். அவை