பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநீலநக்க நாயனார் புராணம் 263

யாவன : அ டி ய வ ர் க ைள வரவேற்று உபசரித்து விருந்துணவை உண்ணச் செய்தல், அவர்களுக்கு ஆடை களையும் செ ல் வ த் ைத யு ம் வழங்குதல் முதலியவை. தலைத்தலை - ஒவ்வோர் இடத்திலும். சிறப்ப . சிறப்பைப் பெற்று விளங்க. ச் : சந்தி. சேவின் மேலவர் . இடப வாகனத்தின் மேல் எழுந்தருளுபவராகிய பிரமபுரீசருடைய. மைந்தர் ஆம் - புதல்வர் ஆகும். திரு . அழகிய. மறை - வேதியராகிய; திணை மயக்கம், ச் : சந்தி. சிறுவர் . இளைஞராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். பூ அடித்தலம் - செந்தாமரை மலர்களைப் போன்ற திரு வடிகள் பல சிவத்தலங்களில். பூ: ஒருமை பன்மை மயக்கம். அடி : ஒருமை பன்மை மயக்கம். தலம் : ஒருமை பன்மை மயக்கம். .ெ பா ரு ந் தி ய - அமைந்த, உணர்வொடும் - உணர்ச்சியோடும். பயின்றார் - வாழ்ந்து வந்தார்.

சேவின் மேலவர் மைந்தர் : இமையப் பாவை திரு முலைப்பால் தேசம் உய்ய உண்டவர் தாம் திருமா மகனார் ஆதலினாற், சாகவாசியுடன் பெற்றார்." "புரமெரித்தார் தி ரு ம க ன ார்.', புரமெரித்தார் திருமகனார் அப்பர் இந்தப் புனனாட்டில் எழுந்தருளி யிருப்பீர் என்று., 1.ந ஞ் ச ண கண்டர்தம் திரு மகனாருடன்.", செய்ய மேனியர் திருமகனார் உறை மடத்தில்.", ஆறு சூடினார் திருமகனார்.' என்று சேக்கிழார் பாடியருளியவற்றைக் காண்க.

அடுத்து வரும் 36 - ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

சண்பையாகிய சீகாழியை ஆட்சி புரிபவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் எழுந்தருளிச் செல்லும் எந்தச் சிவத்தலத்திற்கும் அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரோடு தாம் பூண்டிருக்கும் நட்பு மேம்பாட்டை அடைந்து விளங்க இடையில் சில தினங்களைப் போக விட்டு விட்டு அப்பால் அடைந்து வண்மையினால் பெருமை பெற்று விளங்கும் புகழைப்.