பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம் ar

அந்தப் பெருமிழலைக்குறும்ப நாயனார் ஒவ்வொரு நாளும் நம்பி ஆரூரராகிய சுந்தரமூர்த்தி நாயனாருடைய திருநாமத்தை உச்சரித்த நன்மையினால் தாம் ஆட்சி புரியும் வகையினால் அணிமா, வகிமா, மகிமா, பிராத்தி, கரிமா, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்னும் அட்டமா சித்திகளானவற்றைப் பெற்றதற்குப் பிறகு தம்முடைய திருவுள்ளத்தில் மூண்டு எழும் விருப்பம் அவற் றோடு பெருகி எழ முதல்வராகிய சிவபெருமானாருக்கு உரிய திருநாமமாகிய ந, ம, சி, வா, ய என்னும் ஐந்து எழுத்துக்கள் அடங்கிய பஞ்சாட்சரத்தையும் தம்முட்ைய நண்பரும், செல்வரும், உணர்ச்சியும் ஆக விளங்கும் இயல்பு வாய்ப்பாக அமைய தம்முடைய திருவவதாரத் தலமாகிய பெருமிழலையில் பொருந்தித் தங்கிக் கொண்டிருந்தார். பாடல் வருமாறு: -

காளும் கம்பி ஆருரர்

ாாமம் கவின்ற கலத்தாலே ஆளும் படியால் அணிமாதி

சித்தி ஆன அணைக்ததற்பின் மூளும் காத லுடன்பெருக *-. முதல்வர் காமத் தஞ்செழுத்தும் கேளும் பொருளும் உணர்வுமாம்

பரிசு வாய்ப்பக் கெழுமினார்.'

நாளும் - அந்தப் பெருமிழலைக்குறும்ப நாயனார்

ஒவ்வொரு நாளும், பெருமிழலைக் குறும்ப நாயனார்: தோன்றா எழுவாய். நம்பி ஆரூரர் . நம்பி ஆரூரராகிய சுந்தரமூர்த்தி நாயனாருடைய. நாமம் - திருநாமத்தை. நவின்ற - உச்சரித்த ஒதிய' எனலும் ஆம். நலத்தால்: நல்ல செய்கையால். ஏ : அசை நிலை. ஆளும். தாம் ஆட்சி புரியும். படியால் . வகையினால். அணிமாதி - அணிமா முதலிய. சித்தி.சித்கள்: ஒருமை பன்மை மயக்கம். அவையாவன: அணிமா, வகிமா, மகிமா, பிராத்தி,

கரிமா, பிராகாமியம், சசத்துவம், வசித்துவம் என்பவை.