பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#8 பெரிய புராண விளக்கம் - 9

ஆன ஆனவற்றை. அணைந்ததற் பின் - பெற்றதற்குப் பிறகு, மூளும் - தம்முடைய திருவுள்ளத்தில் மூண்டு எழும்: காதல் - விருப்பம், உடன் - அ வ ற் றோ டு. பெருக - அவற்றோடு பெருகி எழ. முதல்வர் - எல்லாத் தேவர் களுக்கும் முதல் தேவராகிய மகாதேவருக்கு உரிய, நாமத்து - திருநாமமாகிய, அஞ்சு எழுத்தும் - ந, ம, சி, வா, ய என்னும் ஐந்து எழுத்துக்கள் அடங்கிய பஞ்சாட் சரத்தையும். எழுத்து: ஒருமை பன்மை மயக்கம். நமசிவாய' என்பதைச் சிவபெருமானுடைய திருநாம மாகக் கூறுவது மரபு: நந்தி நாமம் நமசிவாயவே என்று வருதலைக் காண்க: கேளும் - நண்பரும்; உறவினரும்: எனலும் ஆம். பொருளும் . செல்வமும். உணர்வும் - உணர்ச்சியும். ஆம் ஆக விளங்கும். பரிசு - இயல்பு: வாய்ப்ப - வாய்ப்பாக அமைய, க் சந்தி. கெழுமினார் - அந்த நாயனார் தம்முடைய திருவவதாரத் தலமாகிய பெருமிழலையில் பொருந்தித் தங்கிக் கொண்டிருந்தார்.

பிறகு வரும் 7 ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

இத்தகைய முறையில் இந்தப் பெருமிழலைக் குறும்ப நாயனார் தம்முடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டு போக இடபத்தைத் துவசமாக மேலே உயர்த்திப் பிடித்த வராகிய சிவபெருமானார் தம்முடைய தங்கத்தைப் போன்றவையும் அழகியவையும் வெள்ளிக் கழல்களைப் பூண்டவையுமாகிய திருவடிகள் தலையின் மேல் படியுமாறு எழுந்தருளி வந்து வழக்கைத் திருவாய் மலர்ந்தருளிச் செய்து நிலைபெற்று விளங்கும் அடிமை ஒலையைத் திருவெண்ணெய் நல்லூரில் உள்ள நியாய சபைக்கு முன்னால் காண்பித்தருளி கிருபாபுரீசர் தமக்கு ஆளாகத் தடுத்து ஆண்டு கொண்ட வன்றொண்டராகிய சுந்தர மூர்த்தி நாயனார் தங்களுடைய உச்சிகளின்மேல் சந்திரன் தவழும் மாடங்கள் நிரம்பி விளங்கும் கொடுங்கோளுரை அடையலானார். பாடல் வருமாறு : ,િ જી