பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம் 露9

  • இன்ன வாறே இவர் ஒழுக

ஏறு கொடிமேல் உயர்த்தவர்தம் பொன்னங் கழல்கள் மண்ணின்மேற்

பொருந்த வந்து வழக்குரைத்து மன்னும் ஒலை அவைமுன்பு --- காட்டி ஆண்ட வன்றொண்டர் சென்னி மதிதோய் மாடமலி

கொடுங்கோ ளுரைச் சேர்வுற்றார்.' இன்னவாறு - இத்தகைய முறையில். ஏ : அசை நிலை. இவர் - இந்தப் பெருமிழலைக்குறும்ப நாயனார். ஒழுக. தம்முடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டு போக. ஏறு - இடபத்தை. கொடி - துவசமாக. மேல் உயர்த்தவர் . உயர்த்திப் பிடித்தவராகிய சிவபெருமானார். தம் . தம்முடைய. பொன் - தங்கத்தைப் போன்ற உவம ஆகுபெயர். அம் - அழகிய கழல்கள் - வெற்றிக் கழல் களைப் பூண்ட திருவடிகள்: ஆகுபெயர். மண்ணின்மேல் . தரையின்மேல். .ெ பா ரு ந் த - ப டி யு மாறு. வந்து . எழுந்தருளி வந்து. வழக்கு ஒரு வழக்கை உரைத்து - திருவாய் மலர்ந்தருளிச் செய்து, மன்னும் - நிலைபெற்று விளங்கும். ஒலை - அ டி மை ஓ ல்ை ைய. அவை . திருவெண்ணெய் நல்லூரில் உள்ள நியாய சபைக்கு. முன்பு - முன்னால் காட்டி - காண்பித்தருளி. ஆண்டகிருபாபுரீசர் தமக்கு ஆளாகத் தடுத்து ஆண்டுகொண்ட. வன்றொண்டர் . வன்றொண்டராகிய சுந் த ர மூர் த் தி நாயனார். சென்னி . தங்களுடைய உச்சிகளின் மேல்; ஒருமை பன்மை மயக்கம். மதி - சந்திரன். தோய் . தவழும். மாடம் - மாடங்கள்: ஒருமை பன்மை மயக்கம். மலி - நிரம்பி விளங்கும். கொடுங்கோளுரை - மலை நாட்டில் உள்ள கொடுங்கோளுர் என்னும் சிவத்தலத்தை. ச் : சத்தி. ேச ர் வு ற் ற | ர் - அ ந் த ந ம ய ன ர ர் அடையலானார். - -

பிறகு வரும் 8 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு :