பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岛的 - பெரிய புராண விளக்கம் 9

அந்தச் சுந்தரமூர்த்தி நாயனார் அவ்வாறு கொடுங் கோளுருக்கு எழுந்தருளித் திருவஞ்சைக் களத்தில் திருக் கோயில் கொண்டு எழுந்தருளியிருப்பவரும், பாற்கடலில் எழுந்த ஆலகாலவிடத்தை விழுங்கியருளியவரும், அமு. தத்தைப் போன்றவருமாகிய திருவஞ்சைக் களத்தப்பரைப் புகழ்ந்து அடைபவராகிய அந்த நாயனார் செம்மையாகிய இனிய சொற்கள் அமைந்த செந்தமிழ் ம்ொழியில் அமைந்த மாலைகளாகிய பல திருப்பதிகங்களைப் பாடியருள எல்லாத்தேவர்களுக்கும் முதல் தேவராகிய அந்த அஞ்சைக் களத்தப்பர் வழங்கிய திருவருளினால் மேகங்களினிடையே விளங்கும் வடக்குத் திசையில் விளங்கும் கயிலாய மலையை அடைவதற்காக வரும் வாழ் வைத் தம் மு ைடய திருவுள்ளத்தில் தெளியுமாறு இந்தப் பெருமிழலையில் நெடுங்காலமாகப் புகழோடு விளங்கும் பெருமிழலையில் திருவவதாரம் செய்தருளிய பெருமிழலைக் குறும்ப நாயனார் தெரிந்து கொண்டார். பாடல் வருமாறு :

" அஞ்சைச் களத்து நஞ்சுண்ட

அமுதைப் பரவி அணைவுறுவார் செஞ்சொல் தமிழ்மா லைகள்மொழியத்

தேவர் பெருமான் அருளாளே மஞ்சில் திகழும் வடகயிலைப்

பொருப்பில் எய்த வரும்வாழ்வு கெஞ்சில் தெளிய இங்குணர்ந்தார்

டுே மிழலைக் குறும்பனார்.' அஞ்சைக் களத்து . அந்தச் சுந்தரமூர்த்தி நாயனார் அவ்வாறு கொடுங்கோளுருக்கு எழுந்தருளி திருவஞ்சைக் களத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும்: ஆகுபெயர். நஞ்சு-பாற்கடலில் எழுந்த ஆலகாலவிடத்தை. உண்ட - விழுங்கிய அமுதை - அமுதத்தைப் போன்ற, அஞ்சைக் களத்தப்பரை உவம ஆகுபெயர். ப் : சந்தி. பரவி - புகழ்ந்து. அணைவுறுவார் - அடையவராகிய அந்தச் சுந்தரமூர்த்தி நாயனார். செம்-செம்மையாக உள்ள.