பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமிழலைக் குறும்ப நாயனார் புராண்ம் sr சொல் - இனிய சொற்களைக் கொண்ட: ஒருமை பன்மை மயக்கம். தமிழ் - செந்தமிழ் மொழியில் அமைந்த மாலை கள் . மாலைகளாகிய பல திருப்பதிகங்களை. மொழிய பாடியருள. த் சந்தி, தேவர் . எல்லாத் தேவர்களுக்கும். ஒருமை பன்மை மயக்கம். பெருமான் . முதல் தேவராகிய அந்த அஞ்சைக் களத்தப்பர். அருளால் - வழங்கிய திருவருளினால். ஏ : அசைநிலை, மஞ்சில் - மேகங்களுக்கு இடையில்: ஒருமை பன்மை மயக்கம். திகழும் - விளங்கும். வடி - வண்டதிசையில் விளங்கும். கயிலைப் பொருப்பில் - கயிலாய மலையை உருபு மயக்கம். எய்த வரும் - அடைவதற்காக வரும். வாழ்வு, வாழ்வை. நெஞ்சில் தம்முடைய திருவுள்ளத்தில். தெளிய தெளிவை அடையு. மாறு. இங்கு - இந்தப் பெருமிழலையில் -நீடு நெடுங்கால மாகப் புகழோடு விளங்கும். மிழலை - பெருமிழலையில் திருவவதாரம் செய்தருளிய ஆகுபெயர். க் சந்தி குறும்பனார் - பெரு மி ழ ைல க், குறும்ப நாயனார். உணர்ந்தார் - தெரிந்து கொண்டார். o н

ஒரு அஞ்சைக் களம்: இது மலை நாட்டில் உள்ள வைத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவர் அஞ்சைக் களத்தீசர்; அஞ்சைக் களத்தப்பர் எனவும் வழங்கப் பெறுவார். அம்பிகை உமையம்மை. தீர்த்தம் சிவகங்கை. இது இருஞாலக்கொடை என்னும் ஊருக்குத் தெற்குத் திசையில் 4 மைல் தூரத்தில் உள்ளது. சுந்தரமூர்த்தி நாயனார் வெள்ளையானையின் மேலும், அவருட்ைய தோழராகிய சேரமான் பெருமாள் நாயனார் குதிரையின் மேலும் ஏறிக்கொண்டு கயிலாயத்துக்கு எழுந்தருளிய தலம் இது. பரசுராமர் தம்முடைய அன்னையைக் கொன்ற பாவத்தைப் போக்கும் பொருட்டு வழிபட்ட தலம் இது. ,

இந்தத் தலத்தைப்பற்றிச் சுந்தரமூர்த்தி நாயனார். பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு : & . . . .