பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமிநந்தியடிகள் நாயனார் புராணம் 28ፖ

சிங்தை மகிழ்ந்து மிகந்தி - அடிகள் செய்வ தறிந்திலரால்." வந்த - நீர் உமக்கு உண்டான, கவலை - இந்த மனக்கவலையை. மாற்றும் - விட்டு விடுவீராக. இனி . இனிமேல். மாறா - அவியாத, விளக்கு - திருவிளக்குக் களை ஏற்றி வைக்கும்; ஒருமை பன்மை மயக்கம். ப்.: சந்தி. பணி. திருப்பணியை. மாற - நீர் செய்ய. இந்த மருங்கில் - இந்தத் பக்கத்தில் உள்ள குளத்து - குளத்தில் நிரம்பியிருக்கும். நீர் - புனலை. முகந்து கொடு - ஒரு குடத்தில் மொண்டு கொண்டு. வந்து ஏற்றும் - வந்து அந்த விளக்குக்களை ஏற்றுவீராக. என . என்று இடைக்குறை. அந்தி - செவ்வந்தி நேரத்தில். மதியம் . உதயமாகும் பிறைச் சந்திரனை. அணிந்த - தம்முடைய தலையின்மேல் புனைந்து கொண்டிருக்கும். பிரான் - தலைவர் ஆகிய அகிலேசுவரர்: ஒருமை பன்மை மயக்கம். அருளால் - வழங்கிய திருவருளால் எழுந்த - ஆகாயத்தில் எழுந்து கேட்ட, மொழி - அந்த அசரீரி வாக்கை, கேளா - கேட்டருளி, ச் : சந்தி. சிந்தை . தம்முடைய திருவுள்ளத்தில். மகிழ்ந்து - மகிழ்ச்சியை அடைந்து. நமிநந்தியடிகள் - அந்த நமிநந்தி அடிகள் நாயனார். செய்வது - இன்னதைச் செய்வது என்று. அறிந் ரி - தெரிந்து கொள்ளாமல் மயங்கினார். ஆல் : சற்றசை நிலை. -

அடு துவரும் 13- ஆம் கவியின் உள்ளுறை வருமாறு :。 . அந் நமிநந்தி அடிகள் நாயனார் தம்முடைய தலையின் மேல் கங்கையாற்றின் புனலைத் தங்க வைத்த தலைவராகிய அகிலேசுவரர் வழங்கிய திருவருளையே தம்முடைய திருவுள்ளத்தில் தி யா னி த் து எழுந்து. செல்வாராகி நல்ல புனல் நிரம்பிய ஒரு பொய்கையின் நடுவில் இறங்கித் தம்முடைய தலைவராகிய அகில்ேசு வரருடைய திருநாமத்தை ஓதி அந்த ஈசுவரரைத் துதித்து