பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 - பெரிய புராண விளக்கம். 9

ஏதம் கினைக்த அருகக்தர்

எதிரே முதிரும் களிப்பினுடன்

காதர் அருளால் திருவிளக்கு

நீரால் எரித்தார் நாடறிய."

% சோதி - அந்த நமிநந்தியடிகள் நாயனார் ஒளியை வீசும். விளக்கு ஒன்று - திருவிளக்கு ஒன்றை. ஏற்றுதலும் - ஏற்றி வைத்தவுடன். சுடர் - அந்த விளக்கு ஒளியை. விட்டுவெளியிட்டு; வெளிப் படுத்தி. எழுந்தது - எழுந்து

விளங்கியது. அது . அந்த விளக்கை. நோக்கி - பார்த்து.

ஆதிமுதல்வர்-எல்லாத் தேவர்களுக்கும் ஆதிமுதல்வராகிய, அரனெறியார் - திருவாரூர் அரநெறி என்னும் திருக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் அகிலேசுவரருடைய, கோயில் - திருக்கோயில். அடைய - முழுவதும். விளக்கு : திருவிளக்குக்களை ஒருமை பன்மை மயக்கம். ஏற்றி-அந்த நாயனார் ஏற்றி வைத்து விட்டு. ஏதம் - தமக்குத் துன்பத்தைச் செ ய் வ த ற் கு. நினைந்த - எண்ணிய, அருகந்தர் - அருகத் பரமேஷ்டியை வணங்கும் அந்தச் சமணருக்கு. எதிர் - எதிரில். ஏ : அசைநிலை. முதிரும். முதிர்ச்சியை அடைந்து விளங்கும். களிப்பினுடன் . ஆனந்தத்தோடு. நாதர் - தம்முடைய தலைவராகிய அகிலேசுவரர். அருளால் - வழங்கிய திருவருளால். திரு விளக்கு - திருவிளக்குக்களை ஒருமை பன்மை மயக்கம், நீரால் - அந்தப் பொய்கையிலிருந்து தாம் கொண்டு வந்திருந்த புனலால். நாடு - இந்தச் செந்தமிழ் நாட்டில் வாழும் மக்கள் இடஆகுபெயர். அறிய - தெரிந்து கொண்டு வியக்குமாறு. எரித்தார் - எரியுமாறு செய்தார்.

அடுத்து உள்ள 15 - ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு : - ' ' ' ',

அந்த நமிநந்தி அடிகள் நாயனார் தண்ணீரால் நிறைந்திருக்கும் இயல்போடு ஏற்றி வைத்த திரு விளக்குக்கள் இரவு தேரம் விடிகிற வரையிலும் நின்று