பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமிநந்தியடிகள் நாயனார் புராணம் 291

எரிந்து கொண்டிருக்க நீர் குறையும் அகல்கள் எல்லா வற்றிற்கும் அவை கொள்ளுவதற்கு வேண்டியிருக்கும் புனலைப் பெய்து இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம் வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங் களினுடைய அர்த்தமாகிய அகிலேசுவரரை அருச்சனை புரியும் இல்லற வாழ்க்கையில் வரையறை பிழையாமல் தாம் தங்கியிருந்து வாழும் சிவத்தலமாகிய ஏமப்பேறுாரில் அன்று இரவு நேரத்திலேயே அடைபவராகி , அந்த அகிலேசுவரரை வணங்கி விட்டு வெளியில் செல்ல எண்ணினார். பாடல் வருமாறு :

  • கிறையும் பரிசு திருவிளக்கு

விடியு மனவும் கின்றெரியக்

குறையும் தகளி களுக்கெல்லாம்.

கொள்ள வேண்டும் நீர்வார்த்து

மறையின் பொருளை அருச்சிக்கும்

மனையின் கியதி வழுவாமல்

உறையும் பதியின் அவ்விரவே

அணைவார் பணிவுற் றொருப்பட்டார்.'

நிறையும் - அந்த ந மி ந ந் தி ய டி. க ள் நாயனார் தண்ணிரால் நிறைந்திருக்கும். பரிசு - இயல்போடு. திருவிளக்கு - ஏற்றி வைத்த திருவிளக்குக்கள்: ஒருமை பன்மை மயக்கம். விடியும் அளவும் - அந்த இரவு நேரம் விடிகிற வரையிலும். நின்று எரிய அவியாமல் நின்று எரிந்து கொண்டிருக்க. க், சந்தி. குறையும் . நீர் குறையும். தகளிகளுக்கு எல்லாம் - அகல்கள் எல்லாவற்றிற்கும், கொள்ள வேண்டும் - அவை கொள்ளுவதற்கு வேண்டி யிருக்கும். நீர் - புனலை. வார்த்து - பெய்து. மறையின் - இருக்கு வேதம், யஜுர்வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். பொருளை அர்த்தமாகிய அகிலேக வரரை. அருச்சிக்கும் . அருச்சனை புரியும். மனையின் . இல்லற வாழ்க்கையினுடைய. நியதி - வரையறை.