பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமிதந்தியடிகள் நாயனார் புராணம் - 295

நேரத்தில்: இரவுக்கு முந்திய மாலை வேளையில். அரிய - அருமையாக உள்ள தண்ணீரால் எரிந்தமையால் அருமை உடையவை ஆயின. விளக்கு - திருவிளக்குக்களை: ஒருமை பன்மை மயக்கம். எங்கும் . திருக்கோயிலில் உள்ள எந்த இடங்களிலும்; ஒருமை பன்மை மயக்கம். ஏற்றி - தி வைத்து விட்டு. அடி - அந்த நாயனார் அந்த அகிலேசுவரருடைய திருவடிகளை ஒருமை பன்மை மயக்கம். பணி வார் - வணங்குபவர் ஆனார்.

பிறகு வரும் 18 - ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

எல்லாத் தேவர்களுக்கும் தலைவராகிய தியாகராஜப் பெரு மா னா ரு ைட ய திருத்தொண்டர்களினுடைய வெற்றிக் கழலைப் பூண்டு கொண்டு விளங்கும் திருவடி களைத் தேவலோகத்தில் வாழும் தேவர்கள் வந்து வணங்கும் அழகைப் பெற்ற திருவாரூர் நகரத்தில் முன் காலத்தில் செய்ததைப் போல பல தினங்களிலும் தாம் புரிந்து பழகும் திருப்பணிகளைப் புரித்து கொண்டு அந்த நமிநந்தியடிகள் நாயனார் தம்முடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டு போக தண்டியடிகள் நாயனாரால் சமணர்கள் கலக்கத்தை அடைந்து தமக்கு ஒரு சார்பு இல்லாத அந்தச் சமணர்களாகிய இழிந்த குணங்களையும் இழிந்த செயல்களைச் செய்யும் இயல்பையும் பெற்றவர்கள் அடியோடு அழிந்து போக ஏழு உலகங்களிலும் பரவி யிருக்கும் பெருமை அமைந்தது. பாடல் வருமாறு :

பண்டு போலப் பலநாளும் -

பயிலும் பணிசெய் தவர்ஒழுகத் தண்டி அடிக ளால்அமணர்

கலக்கம் விளைந்து சார்பில்அமண் குண்டர் அழிய ஏழுலகும்

குலவும் பெருமை நிலவியதால், அண்டர் பெருமான் தொண்டர்கழல்

அமரர் பணியும் அணியாதர்."