பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29s - பெரிய புராண விளக்கம் - 9

இந்தப் பாடலில் விற்பூட்டுப் பொருள் கோள் அமைந் துள்ளது. அண்டர் - எல்லாத் தேவர்களுக்கும்; ஒருமை பன்மை மயக்கம். பெருமான்-தலைவராகிய தியாகராஜப் பெருமானாருடைய, ஒரு ைம ப ன் மை மயக்கம். தொண்டர் - திருத்தொண்டர்களினுடைய, ஒரு மை பன்மை மயக்கம். கழல் - வெற்றிக் கழலைப் பூண்டு கொண்டு விளங்கும் திருவடிகளை; ஆகு பெயர். அமரர் - தேவலோகத்தில் வாழும் தேவர்கள்; ஒருமை பன்மை மயக்கம். பணியும் . திருவாரூருக்கு வந்து வணங்கும். அணி - அழகைப் பெற்ற. ஆரூர் - திருவாரூர் நகரத்தில். பண்டு போல - முன்காலத்தில் செய்ததைப் போல. ப் : சந்தி. பல நாளும் - பல தினங்களிலும்; ஒருமை பன்மை மயக்கம். பயிலும் - தாம் புரிந்து பழகும். பணி - திருப்பணிகளை; ஒருமை பன்மை மயக்கம். செய்து புரிந்து கொண்டு. அவர் - அந்த நமிநந்தி அடிகள் நாயனார். ஒழுக - தம்முடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டு போக. த் : சந்தி. தண்டி அடிகளால் - தண்டி அடிகள் நாயனாரால். அமணர் . சமணர்கள்; ஒருமை பன்மை மயக்கம். கலக்கம் - கலக்கத்தை. விளைந்து - அடைந்து. சார்பு - நல்ல சார்பு. இல் - தமக்கு ஒன்றும் இல்லாத கடைக்குறை, அமண் - சமணர்களாகிய; திணை மயக்கம். குண்டர் - இழிந்த குணங்களையும், இழிந்த செயல்களைச் செய்யும் இயல்பையும் பெற்றவர்கள்: ஒருமை பன்மை மயக்கம். அழிய - அடியோடு அழிந்து, போக. ஏழு உலகம். ஏழு உலகங்களிலும்; ஒருமை பன்மை மயக்கம். குலவும் - பரவியிருக்கும். பெருமை நிலவியது - பெருமை அமைந்திருந்தது. ஆல் : அசை நிலை. .

அடுத்து உள்ள 19-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு : இனிய ஓசையைப் பெற்ற இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களையும் ஆராய்ந்து அத்தியயனம் செய்து நிறை வேற்றிய வேதியிர்ாகிய அந்த நமிநந்தியடிகள் நாயனார்