பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிநந்தியடிகள் நாயனார் புராணம் 297.

நல்ல திருத்தொண்டுகள் ஆக எண்ணி எல்லா உயிர் களுக்கும் தலைவரும் திருவாரூரில் உள்ள ஆலயத்தில் விளங்கும் பாம்புப் புற்றைத் தாம் எழுந்தருளும் இடமாகக், கொண்டருளிய பரிசுத்தராகிய வன்மீக நாதருக்குத் திருவமுதைச் சமைப்பதற்கு வேண்டியிருக்கும் அரிசி முதலாக இருக்கும் பொருள்களை நீதி முறையோடு ஆட்சி புரியும் சோழ மன்ன்ன் தான் விரும்பும் அறக்கட்டளைகள்' பலவற்றையும் சிங்காதனத்தின்மேல் விளங்கு மாறு அமர்ந்து கொண்டு வேதங்கள், சிவாகமங்கள் ஆகிய சாத்திரங்கள் விதித்துள்ள விதிகளின்படி விளங்குமாறு அமைத்து வைத்தான். பாடல் வருமாறு : காத மறைதேர் கமிகக்தி

அடிக ளார்ாற் றொண்டாகப் யூத காதர் புற்றிடங்கொன்

புனிதர்க் கமுது படிமுதலாம். நீதி வளவன் தான்வேண்டும் . கிபக்தம் பலவும் அரியணையின்

மீது திகழ இருக்தமைத்தான்

வேதா கமருால் விதிவிளங்க. நாத . இனிய ஓசையைப் பெற்ற மறை - இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களையும்; ஒருமை பன்மை மயக்கம். தேர் - ஆராய்ந்து அத்தியயனம் செய்து நிறை வேற்றிய வேதியராகிய, நமிநந்தி அடிகளார் . நமிநந்தி அடிகள் நாயனார். நல் - நல்ல. தொண்டாக - திருத் தொண்டுகளாக எண்ணி; ஒருமை பன்மை மயக்கம், ப்: சந்தி. யூத - எல்லா உயிர்களுக்கும். பூதங்களுக்கு" எனலும் ஆம்; ஒருமை பன்மை மயக்கம். நாதர் - தலை வரும். புற்று - திருவாரூரில் உள்ள ஆலயத்தில் விளங்கும் பாம்புப் புற்றை. இடம்கொள் - தாம் எழுந்தருளும் இட டிாகக் கொண்ட, புனிதர்க்கு - பரிசுத்தராகிய வன்மீக நாதருக்கு. அமுது படி - திருவமுதைச் சமைப்பதற்கு