பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமிநந்தியடிகள் நாயனார். புராணம் - agg

டொன்றும் செயலும் பங்குனியுத்

திரமாம் திருநாள் உயர்சிறப்பும் கின்று விண்ணப் பம்செய்த -- படிசெய் தருளும் கிலைபெற்றார்.'

வென்றி - வெற்றியைப் பெற்ற. விடையார் - இடப வாகனத்தை ஒட்டுபவரும். மதிச்சடையார் . பிறைச் சந்திரனைத் தம்முடைய தலையின் மேல் உள்ள சடாபாரத்தில் தங்க வைத்தவரும் ஆகிய. வீதிவிடங்கப் பெருமாள் தாம் என்றும் . விதிவிடங்கப் பெருமாள் தாம் எந்தக் காலத்திலும். திருவாரூர் . திருவாரூர் என்னும் நகரத்தை. ஆளும். ஆட் சி புரி ந் த ருளும், இயல்பின் இயல்பாகிய. முறைமை . முறையின்படி. த் சந்தி, திருவிளையாட்டு . தி ரு வி ைள யாடலாக ஒன்றும் பொருந்தியிருக்கும். செயலும் . செயலையும். பங்குனி உத்திரமாம் - பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர மாகும். திருநாள் - திரு நட்சத் தி ரத் தி ல். உயர் - திரு வாருரில் நடைபெறும் திருவிழாவினுடைய உயர்ச்சியைப் பெற்ற. உயர்: முதல் நிலைத் தொழிற் பெயர். சிறப்பும் - சிறப்பையும். . நின்று - திலைத்து நின்று. “நின்று கொண்டு எனலும் ஆம். விண்ணப்பம் செய்த படி - விண்ணப்பத்தைப் புரிந்த படியே. செய்தருளும்.புரிந்தருளும். நிலை நிலையை. பெற்றார் . அந்த, தமிநந்தி அடிகள் நாயனார் அடைந்தார். -

பிறகு வரும் 21-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு : இத்தகைய இயல்போடு திருப்பணிகள் பலவற்றையும் புரிந்து கொண்டே ஏழு உலகங்களிலும் நிலை பெற்று விளங்கும் பெருமையைப் பெற்ற திருவாரூர் என்னும் நகரத்தை ஆட்சி புரியும் அரசராகிய தியாகராஜப் பெருமானாருடைய அடியவர்கள் ஒழுகும் வழியில் நிற்பவராகி அத்தகைய முறையில் திருவிளையாடலைப் புரிந்தருளித் தம்முடைய திருவருளை வழங்க எந்தக் காலத்திலும் நன்மைகள் பெருகுமாறு நமிநந்தி அடிகள்