பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$90, பெரிய புராண விளக்கம் 9

நாயனார் அடியேங்கள் உஜ்ஜீவனத்தை அடையும் வண்ணம் அந்தத் தி யாக ரா ஜ ப் பெருமானாரை வணங்கினார். பாடல் வருமாறு :

இன்ன பரிசு திருப்பணிகள்

பலவும் செய்தே ஏழுலகும்

மன்னும் பெருமைத் திருவாரூர்

மன்னர் அடியார் வழிகிற்பார்

அன்ன வண்ணம் திருவிளையாட்

டாடி அருள எங்காளும்

நன்மை பெருக கமிங்க்தி

அடிகள் தொழுதனர் நாம்உய்ய."

இன்ன - இத்தகைய. பரிசு - இயல்போடு. திருப் பணிகள் பலவும் . திருப்பணிகள் பலவற்றையும், செய்தே புரிந்து கொண்டே. ஏழு உலகும் - ஏழு உலகங்களிலும். உலகு : ஒருமை பன்மை மயக்கம். மன்னும் - நிலை, பெற்று விளங்கும். பெருமை - பெருமையைப் பெற்ற. த் : சந்தி. தி ரு வா ருர் - தி ருவா ளு ர் எ ன் னு ம். நகரத்தை. மன்னர் - ஆட்சி புரியும் அரசராகிய தியாக, ராஜப் பெருமானாருடைய அடியார் . அடியவர்கள்; , ஒருமை பன்மை மயக்கம். வழி . ஒழுகும் வழியில். நிற்பார் - நிற்பவராகி; முற்றெச்சம், அன்ன . அத்தகைய, வண்ணம் - முறையில். திருவிளையாட்டு ஆடி. திருவிளை பாடலைப் புரிந்தருளி. அருள தம்முடைய திருவருளை வழங்க. எந்நாளும் - எந்தக் காலத்திலும். நன்மை . தன்மைகள்: ஒருமை பன்மை மயக்கம். பெருக - பெருகு மாறு. நமிநந்தி அடிகள் - நமிநந்தி அடிகள் நாயனார். நாம் - அடியேங்கள்: என்றது சேக்கிழார் தம்மையும் பிற தொண்டர்களையும் சேர்த்துக் கூறியது. உய்ய . உஜ்ஜீவனத்தை அடையும் வண்ணம். தொழுதார் . அந்தத்தியாகராஜப் பெருமானாரை வணங்கினார்.

பிறகு வரும் 22-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு