பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமிநந்தியடிகள் நாயனார் புராணம் - 3 0 } .

எல்லாத் தேவர்களுக்கும் தலைவராகிய தியாகராஜப் பெருமானார் திருவாரூரிலிருந்து புறப்பட்டு எழுந்தருளும் செயலாக அழகிய மணலி என்னும் சிவத்தலத்துக்கு ஒரு

தினத்தில் எழுந்தருளிச் செல்ல அவர் யார் என்று

வினவாமல் அவரை உடனே வணங்கி எல்லாச் சாதிகளில் உள்ள மக்களும் வந்து சேரப் பக்தராகிய நமிநந்தியடிகள் நாயனாரும் அந்த மக் க ளோ டு தியாகராஜப். பெருமானார்ை வணங்கி விட்டுத் தம்முடைய திருமடத்தை அடைந்து தேவர்களினுடைய அரசராகிய தியாகராஜப் பெருமானாருடைய பவனியை அந்தத் திருவாரூரில் தரிசித்து அந்த நாயனார் ஆனந்தத்தை அடைந்தார்.". பாடல் வருமாறு : * > -

தேவர் பெருமான் எழுச்சிதிரு

மணலிக் கொருகாள் எழுந்தருள யாவ ரென்னா துடன்சேவித் -

தெல்லாக் குலத்தில் உள்ளோரும் மேவ அன்பர் தாமும்உடன்

- சேவித் தணைந்து விண்ணவர்தம்

காவ லானர் ஒலக்கம் **

அங்கே கண்டு களிப்புற்றார்."

தேவர் - எல்லாத் தேவர்களுக்கும்; ஒருமை பன்மை மயக்கம், பெருமான் . த ைல வ ரா.கி ய தியாகராஜப் பெருமானார்; ஒருமை பன்மை மயக்கம். எழுச்சி - திரு வாரூரிலிருந்து புறப்பட்டு எழுந்தருளும் செயலாக திரு . அழகிய; செல்வர்கள் வாழும் எனலும் ஆம்: திரு : திணை மயக்கம். மணலிக்கு - மணலி என்னும் சிவத்தலத்துக்கு ஒருநாள் - ஒரு தினத்தில் எழுந்தருள எழுந்தருளிச் செல்ல. யாவர் . அவர் யார். என்னாது . என்று வினவாமல். உ. ட ன் - உ ட ேன. சேவித்து - அவரை வணங்கி. எல்லாக்குலத்தில் . எல்லாச் சாதி களிலும், குலம் : ஒருமை பன்மை மயக்கம்: உள்ளோரும் -