பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

so.2 - பெரிய புராண விளக்கம் - 9.

உள்ள மக்களும்; ஒருமை பன்மை மயக்கம். மேவ - வந்து சேர. அன்பர்தாமும் - பக்தராகிய நமிநந்தியடிகள் நாயனாரும். தாம் : அசை நிலை. உடன் - அந்த மக்களோடு. சேவித்து . தியாகராஜப் பெருமானாரை வணங்கி விட்டு. அணைந்து - தம்முடைய திருமடத்தை அடைந்து. விண்ணவர்தம் - தேவலோகத்தில் வாழும் தேவர்களினுடைய. விண்ணவர் : ஒருமை பன்மை மயக்கம். தம் : அசை நிலை. காவலாளர் . அரசராகிய தியாகராஜப். பெருமானாருடைய, ஒலக்கம் - திருவீதியில் எழுந்தருளும் பவனியை. அங்கு . அந்தத் திருவாரூரில். ஏ : அசை நிலை. கண்டு - தரிசித்து. களிப்புற்றார் - அந்த நாயனார் ஆனந்தத்தை அடைந்தார். . .

பிறகு வரும் 23 - ஆம் பாடலின் கருத்து வருமாறு :

"அந்தப் பரிசுத்தராகிய நமிநந்தியடிகள் நாயனார். இராப் பொழுது விடிந்து விடியற்காலம் வர அந்தத் தியாகராஜப் பெருமானாரை வணங்கி விட்டு மறுபடியும் அந்தப் பெருமானார் எ ழு ந் த ரு வளி யிரு க் கு ம் திருக் கோயிலுக்குள் து ைழ ந் து அ ந் த த் தியாகராஜப் பெருமானாரை வணங்கி விட்டு அந்தத் திருவாரூரிலிருந்து புறப்பட்டுத் தம்முடைய ஊராகிய ஏமப்பேறுாரின் பக்கத்தை அடைந்து பரிசுத்தமாக உள்ள தம்முடைய திருமாளிகைக்கு உள்ளே நுழையாமல் மெழுகைப் போலக் கருமையாகிய இருட்டு அடைந்த அன்று இரவு. நேரத்தில் வெளியிடத்தில் அந்த நாயனார் உறக்கத்தை மேற்கொள்ள அ வ ரு ைட ய திருமாளிகையில் நாள் முழுவதும் முப்பத்திரண்டு அறங்களைச் செய்யும் அந்த நாயனாருடைய பத்தினியார் வந்து தாம் உறங்கும் இடத்துக்குள் நுழைய அவரைப் பார்த்து அந்த நாயனார் பின் வருமாறு திருவாய் மலர்ந்தருளிச் செய்கிறவர் ஆனார். பாடல் வருமாறு :

. பொழுது வைகச் சேவித்துப் --

புனிதர் மீண்டும் கோயில்புகத்