பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமிநந்தியடிகள் நாயனார் புராணம் - . 3 ose

தொழுது தம்மூர் மருங்கணைந்து தூய மனையுட் புகுதாதே

இழுதும் இருள்சேர் இரவுபுறங்

கடையில் துயில் இல்லத்து

முழுதும் தருமம் புரிமனையார்

வந்துட் புகுத மொழிகின்றார்.'

புனிதர் - அந்தப் பரிசுத்தராகிய நமிநந்தியடிகள் நாயனார். பொழுது - இரவு வேளை. வைக - விடிந்து விடியற்காலம் வர, ச் : சந்தி. சேவித்து - அந்தத் தியாக ராஜப் பெருமானாரை வணங்கி விட்டு. ப் : சந்தி. மீண்டும் . மறுபடியும். கோயில் . அந்தப் பெருமானார். எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலுக்குள். புக - நுழைந்து: எச்சத்திரிபு. த் - சந்தி. தொழுது . மீண்டும் ஒரு முறை அந்தத் தியாகராஜப் பெருமானாரை வணங்கி விட்டு. தம் - தம்முடைய ஊர் ஊராகிய ஏமப்பேறுரரின். மருங்கு - பக்கத்தை. அணைந்து - அந்தத் திருவாரூரி விருந்து புறப்பட்டு அடைந்து தூய - பரிசுத்தமாக உள்ள. மனையுள் - தம்முடைய திருமாளிகைக்கு உள்ளே. புகுதாது - நுழையாமல். ஏ : அசைநிலை. இழுதும் . ம்ைக்குழம்பை ஒத்திருக்கும்; உவம ஆகுபெயர். இருள் . இருட்டு. சேர் - சேர்ந்த, இரவு - அன்று இராத்திரி நேரத்தில். புறங்கடையில் - தம்முடைய திருமாளிகைக்கு வெளியில் உள்ள ஓரிடத்தில். துயில . அந்த நமிநந்தி: படிகள் நாயனார் உறக்கத்தை மேற்கொள்ள. இல்லத்து - அந்த நாயனாருடைய திருமாளிகையில். முழுதும் - நாள் முழுவதும். தருமம் - முப்பத்திரண்டு அறங்களை ஒருமை பன்மை மயக்கம். அந்த அறங்கள் இன்ன என்பதை வேறு ஓரிடத்தில் கூறினோம்; ஆண்டுக் கண்டுணர்க. புரி - செய்யும். மனை யார் - அந்த நாயனாருடைய தர்ம பத்தினியார். வந்து உட்புகுத தம்முடைய திருமாளிகை பிலிருந்து வந்து தாம் உறங்கும் இடத்துக்கு உள்ளே துழைய. மொழிகின்றார் . அந்தப் பெண்மணியாரைப்.