பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

郡94、 பெரிய புராண விளக்கம் - 9,

பார்த்து அந்த நாயனார் பின் வருமாறு திருவாய் ம்லர்த் தருளிச் செய்கிறவர் ஆனார். ‘.

பிறகு வரும் 24 - ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு : ‘நமிநந்தியடிகள் நாயனாருடைய தர்மபத்தினியார் அந்த நாயனாரிடம், பிறைச்சந்திரனைத் தம்முடைய தலையின் மேல் தங்க வைத்தவராகிய அகிலேசுவரருக்குத் தேவரீர் செய்ய வேண்டிய பூசைகளைச் செய்து திறை வேற்றி விட்டு தேவரீர் ஒவ்வொரு நாளும் புரிந்து வரும் கடமைகளை முறைப்படி அக்கினி காரியத்தை விரும்பி ஒளபாசனம் புரிந்துவிட்டுத் திருவமுது செய்துவிட்டுப் பிறகு படுக்கையில் படுத்து உறங்குவீராக!' என்று அந்தப் பெண்மணியார் திருவாய் மலர்ந்தருளிச் செய்யத் தம்முடைய தர்மபத்தினியாராகிய அந்த மாதரசியாரிடம்: "தங்களுடைய தலைவனாகிய தியாகராஜப் பெருமான் செல்வர்கள் வாழும் மணலி என்னும் ஊருக்கு எழுந்தருள, அ வ் வாறு எழுந்தருளியதைக் கண்டு அந்தத் தியாகராஜப் பெருமானாரை வணங்கி விட்டு: அவரோடு எழுந்தருளிச் செல்வதற்காக எல்லா ஊர்: களிலும் வாழும் எல்லாச் சாதியினரும் செல்ல அடியேனை அவ்வாறு செல்ல முடியாமல் தீட்டுக் கட்டிப் போட்டு, விட்டது' என அந்த நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டு. பாடல் வருமாறு : . . .

" திங்கள் முடியார் பூசனைகள்

முடித்துச் செய்யும் கடன் முறையால் அங்கி தனைவேட் டமுதுசெய்து - --

பள்ளி கொள்வீர்” என அவர்க்குத், தங்கள் பெருமான் திருமணலிக்

கெழுச்சி சேவித் துடன்கண்ண எங்கும் எல்லா ரும்போத -

இழிவு தொடக்கிற் றெனை. என்று." இந்தப் பாடல் குளகம். திங்கள் - நமிநந்தியடிகள், தாயனாருடைய தர்மபத்தினியார் அந்த நாயனாரிடம்,