பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'நமிநந்தியடிகள் நாயனார் புராணம் i sös,

பிறைச் சந்திரனை முடியார் . தம்முடைய தலையின் மேல் தங்க வைத்தவராகிய அகிலேசுவரருக்கு. பூசனைகள்தேவரீர் செய்ய வேண்டிய பூசைகளை. முடித்து - செய்து நிறைவேற்றி விட்டு. ச் : சந்தி. செய்யும் . தேவரீரி. ஒவ்வொரு நாளும் புரிந்து வரும். கடன் - கடமைகளை: ஒருமை பன்மை மயக்கம். அந்தக் கடமைகளாவன : நீராடுதல், ஆடையை உடுத்துக் கொள்ளுதல், காலையில் சந்தியாவந்தனம் புரிதல், மாத்யான்ஹிகம் புரிதல், உணவை உண்ணுதல், மாலையில் சந்தியாவந்தனம் புரிதல், இரண்டு வேளைகளிலும் ஒளபாசனம் புரிதல் முதலியவை. முறையால் - முறைப்படி. அங்கிதனை - அக்கினி காசியத்தை. தன் : அசை நிலை: ஒளபாசனத்தை. வேட்டு - விரும்பிப் புரிந்து. அமுது செய்து - பிறகு, திருவமுது செய்துவிட்டு. பள்ளி கொள்வீர் - பிறகு தேவரீர் படுக்கையில் படுத்துக் கொண்டு உறங்குவீராக. என - என்று அந்தப் பெண்மணியார் திருவாய் மலர்ந்: தருளிச் செய்ய இடைக்குறை. அவர்க்கு - அந்த மாதரசியாரிடம்: உருபு மயக்கம். த் : சந்தி. தங்கள் - தங்களுடைய: என்றது திருவாரூரில் வாழும் மக்களை. பெருமான் - தலைவனாகிய தியாகராஜப் பெருமான். திரு . செல்வர்கள் வாழும்; திணை மயக்கம். மணலிக்கு - மணலி என்னும் ஊருக்கு எழுச்சி - எழுந்தருள அவ்வாறு எழுந்தருளியதை. சேவித்து தரிசித்து அந்தத் தியாக, ராஜப் பெருமானாரை வணங்கி விட்டு. உடன் . அந்தப். பெருமானாரோடு. நண்ண - எழுந்தருளிச் செல்வதற். காக. எங்கும். எல்லா ஊர்களிலும் வாழும்; ஒருமை. பன்மை மயக்கம். எல்லாரும் . பள்ளர், பறையர், சக்கிலியர் முதலியவர்களோடு அந்தணர், க்ஷத்திரர், வைசியர், வேளாளர் ஆகிய யாவரும். போத, செல்ல. இழிவு. அந்த இழிந்த சாதியாரோடு அடியேன் சென்ற தனால் உண்டான தீட்டு, எனை - அடியேனை: இடைக் குறை. தொடக்கிற்று - கட்டிப் போட்டு விட்டது.