பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 565àಥಿu45 நாயனார் புராணம் sør

உண்டாகிய, தூய்மை - ப ரி சுத் த த் ைத. செய்து - புரிந்து கொண்டு விட்டு. ஏ : அசை நிலை. அகம் - நம்முடைய திருமாளிகைக்கு உள்ளே. புகுந்து - நுழைந்து. வேத - இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். நாதர் - தலைவராகிய தியாக ராஜப் பெருமானாருக்கு. பூ சனை யை - புரியும் 'பூசையை. த் : சந்தி. தொடங்க வேண்டும் . அடியேன் செய்ய ஆர ம்பி க்க வே எண் டும். அ த ற்கு . அல்வாறு அடியேன் செய்யும் பூசைக்கு. நீ சீத நீ குளிர்ச்சியைப் பெற்ற, நல் - நல்ல. நீர் - தீர்த்தம். முதலான - முதலாக உள்ள பண்டங்கனை. அவையாவன : ஆசனப் பலகை, தீர்த்த பாத்திரம், அரைத்த மஞ்சள், அட்சதை, அருச்சனைக்கு உரிய பலவகை மலர்கள், உடுத்துக்கொள்ள மடி வஸ்திரம், வாயைத் துடைத்துக் கொள்ளச் சிறியதுண்டு, அங்கவஸ்திரம், நிவேதனத்திற்குச் சுத்த அன்னம், அன்னத்தில் விட நெய், பருப்பு, பலவகைக் கறியமுதுகள், பருப்புக் குழம்பு, மோர்க் குழம்பு, ரஸம், பாயஸம், பச்சடி, பலவகை ஊறுகாய்கள், உண்ட பிறகு கால்களைக் கழுவத் தீர்த்தம் நிரம்பிய செம்பு முதலியவை. கொண்டு - எடுத்துக் கொண்டு. இங்கு - இந்த இடத் திற்கு, அணைவாய் - வருவாயாக. என - என்று இடைக் குறை. ச்: சந்தி. செப்ப - அந்த நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்ய. க் சந்தி. காதல் அவருடைய காதலைப் பெற்ற மனையார் தாமும் தர்மபத்தினி யாரும். தாம் : அசை நிலை. அவை - அந்தப் பண்டங் களை. கொணரும் - எடுத்துக் கொண்டு வரும். அத்ற்கு - அந்தச் செயலைச் செய்வதற்காக. க் சந்தி. கடிது . சென்று வேகமாக. அணைந்தார் - திரும்பி வந்து சேர்ந்தார். -

அடுத்து வரும் 26 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு :