பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமிநந்தியடிகள் நாயனார் புராணம் * :)

யிருக்கும். அசைவின் தளர்ச்சியினால் உண்டாகிய, அயர்வாலோ - சோர் வினா ேலா. அ. றி .ே யா ம் -

இன்னதென்று அ டி யே ம் தெரிந்து கொள்ள வில்லை. அடியேம் என்றவர் சேக்கிழார். இறையும் . கணநேரம், தாழாது . தாமதம் செய்யாமல். ஏ : அசை நிலை. மேய் - தம்மை மேவிய. உறக்கம் - நித்திரை. வந்து அணைய வந்து சேர. விண்ணோர் - தேவ லோகத்தில் வாழும் தேவர்களினுடைய: ஒருமை பன்மை மயக்கம். பெருமான் - தலைவனாகிய தியாகராஜப் பெருமானுடைய கழல் - வெற்றிக் கழலைப் பூண்டு கொண்டு விளங்கும் திருவடிகளை ஆகுபெயர். நினைந்து, தியானித்துக்கொண்டு. தூய - பரிசுத்தமான அன்பர் . தியாகராஜப் பெருமானாருக்குப் பக்தராகிய அந்த நமிநந்தியடிகள் நாயனார். துயில் கொண்டார் . உறக்கத்தை மேற்கொண்டார். துயிலும் - அவ்வாறு அந்த நாயனார் உறங்கும். பொழுது . சமயத்தில். கனவின் கண் . அவர் கண்ட சொப்பனத்தில்.

பிறகு வரும் 27-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு :

மேம்பாட்டைப் பெற்ற பான்மை திகழும் திரு வாரூரில் உள்ள ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் வீதி விடங்கப் பெருமாளுக்குப் பெருமையைப் பெற்ற தம்முடைய பக்தராகிய அந்த நமிநந்தியடிகள் நாயனார் புரியும் பூசைக்கு எழுந்தருளி வருபவரைப் போல அந்த வீதி விடங்கப் பெருமாள் எழுந்தருளி வந்து, மெய்யான சிவஞானத்தைப் பெற்ற வேதியனாகிய நமிநந்தியே, திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லாரும் எம்முடைய கணங்கள் ஆக விளங்கும் இயல்பை நீ பார்ப்பாயாக." என அந்தப் பெருமாள் திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டு அந்த இடத்திலிருந்து அந்த நாயனாருக்கு எதிரில் அகன்று மறைந்தருளினார்." பாடல் வருமாறு :

செ. புரால் 9–80