பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.12. - பெரிய புராண விளக்கம் , 9

கொண்டு எழுந்து நின்தவாறே. வழிபட்டு - அந்தத் தியாகராஜப் பெருமானாருக்கு உரிய வழிபாட்டைப் புரிந்து விட்டு. மாதரார்க்கும் - தம்முடைய தர்மபத்தினியாராகிய மாதரசியாருக்கும். புகுந்தபடி - நடந்ததை நடந்தவாறே. மொழிந்து - திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டு. விடியல் . இராத்திரி நேரம் அகன்று விடியற்காலம் வந்த போது. விரைவோடு - வேகத்தோடு. நாதனார் தம் - தம்முடைய தலைவராகிய தியாகராஜப் பெருமானார் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும். தம் : அசை நிலை. திருவாரூர் - திருவாரூருக்கு உள்ளே. புகுத . துழையவே. எதிர் - தமக்கு எதிரில். அந்நகர் - அந்தத் திருவாரூர் நகரத்தை. காண்பார் . அந்த நாயனார் sîrriżuju &rporrestriħ. - - . . .

பிறகு உள்ள 29 . ஆம் கவியின் உள்ளுறை வருமாறு :

எல்லாக் கடவுளர்களுக்கும் மேலானவராகிய வீதி விடங்கப் பெருமாள் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி பிருக்கும் திருவாரூரில் பிறந்து வாழும் மக்கள் யாவரும் மையை வைத்தாற் போன்ற நீல மணியை ஒத்த திருக் கழுத்தை உடை ய வ ரா கி ய தியாகராஜப் பெரு மானாருடைய வடிவமே ஆகிப்பெருகி எழும்பிரகாசத்தால், வலிமையை வைத்துப் பொருந்திய திருமேனிகளைப் பெற்றவர்களாக விளங்கும் இயல்பைப் பார்த்து தம்முடைய தலையின்மேல் குவித்த கைகளை அஞ்சலியாக வைத்து அந்தத் தியாகராஜப் பெருமானாரைக் கும்பிட்டு விட்டு அச்சத்தை அடைந்து அந்த நமிநந்தியடிகள் நாயனார் தரையின் மேல் விழுந்து அந்தப் பெருமானாரை வணங்கி விட்டுப் பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு. ஆனந்தத்தில் தலை சிறந்து நின்றார். பாடல் வருமாறு :

  • தெய்வம் பெருமாள் திருவாரூர்ப்

பிறந்து வாழ்வார் எல்லாரும் மைவைத் தளைய மணிகண்டர் -x வடிவே யாகிப் பெருகொணியால்