பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. .318 பெரிய புராண விளக்கம் !

களை. எல்லா உலகும். எல்லா உலகங்களிலும் வாழ்பவர் களும். உலகம் : ஒருமை பன்மை மயக்கம், இடஆகு பெயர். தொழ - வணங்கிப் பாராட்டுமாறு: ச் சந்தி. செய்து - புரிந்து கொண்டு. நன்மை - நல்ல பான்மைகள்: "ஒருமை பன்மை மயக்கம். பெருகும் . தம்முடைய திருவுள்ளத்தில் பெருகி எழும். நமிநந்தி அடிகள் - அந்த நமிநந்தி அடிகள் நாயனார். நயம் ஆர் . இனிமை நிரம்பிய திரு - திருவாரூரில் உள்ள ஓர் அழகிய, வீதி . தெருவில். ச் சந்தி. சென்னி - தம்முடைய தலையின் மேல். மதியும் - பிறைச் சந்திரனும். திரு - அழகிய. நதியும் - கங்கையாறும். அலைய - அலையுமாறு. வரு வார் - எழுந்தருளி வருபவ ரா கி ய தியாகராஜப் பெருமானார் திருக்கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கும். திருவாரூர் . திருவாரூரை, மன்னர் . ஆட்சி புரிந்தருளும் அரசராகிய தியாகராஜப் பெருமானாருடைய. பாத. திருவடிகளினுடைய ஒருமை பன்மை மயக்கம். நீழல் - நிழலில். மிகும் - மிகுதியாக விளங்கும். வளர் - வளரும். பொன் . தங்க நிறத்தைப் பெற்ற சோதி சோதி -உருவமாக. மன்னினார் . அந்த நாயனார் நிலை பெற்று ***a-rm: சிவலோக பதவியைப் பெற்றார் என்பது கருதது. - -- . . . . . இந்த நமிநந்தி அடிகள் நாயனார் புராணத்தில் இறுதியில் வரும் 33 - ஆம் பாடல் சுந்தர மூர்த்தி நாயனாருடைய துதியாக அமைந்துள்ளது. அதன் கருத்து வருமாறு : . . . . . . . - . -

"இந்தச் செந்தமிழ் நாட்டில் வாழும் மக்கள் தெரிந்து கொள்ளும் வண்ணம் முன் ஒரு காலத்தில் நல்ல வாழ் நாள்கள் முடிந்து போன திருமாலுக்குரிய ஐந்து ஆயுதங் களாகிய கதை, சங்கு, சக்கரம், வாள், வில் என்னும் ஐம்படைத் தாலியைப் பூட்டுதல் நிரம்பிய மார்பைப் பெற்ற ஒரு வேதியரினுடைய சிறிய புதல்வனை அவனை விழுங்கிய ஓர் ஒப்பற்ற பெரிய புக்கொளியூர் அவிநாசியில்