பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமிழ்லைக் குறும்ப நாயனார் புராணம் 4I.

அருளும் ஈசரும் சொல்லுக என்றனர்

அன்பரும் கேட்பித்தார்."

சேரர் காவலர் பரிவுடன் கேட்பித்த திருவுலாப் புறம்கொண்டு - நாரி பாகரும் நலமிகு திருவருள் - நயப்புடன் அருள்செய்வார்

ஊரனாகிய ஆலால சுந்தரன்

உடனமர்ந்த திருநீறும் சாரும் நம்கண நாதர்தம் தலைமையில்

தங்கும் என் றருள் செய்தார்,

"அன்ன தன்மையில் இருவரும் பணிந்தெழுந்

தருள்தலை மேற்கொண்டு . . . . மன்னும் வன்றொண்டர் ஆலால சுந்தரர்

ஆகித்தாம் வழுவாத ', ' , - முன்னை நல்வினைத் தொழிற்றலை நின்றனர்.

முதல்சேரர் பெருமானும் . . . . . . . நன்மை சேர்கண நாதராய் அவர் செயும் - நயம்புறு தொழில்பூண்டார்.' -

பிறகு உள்ள 9-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு :

இந்த மண்ணுலகத்தில் விளங்கும் திருநாவலூரில் திருவவதாரம் செய்தருளிய வன்றொண்டராகிய சுந்தர மூர்த்தி நாயனார் யாரும் அடைவதற்கு அருமையாக, உள்ள திருக்கயிலை மலையை நாளைக்கு அடைய, அடியேன் அந்த நாயனாரைப் பிரிந்து கண்களில் உள்ள கருமணிகள் போய்விடக் குருடர்களாகி வாழ்பவர்களைப் போல இனிமேல் வாழமாட்டேன்' என்று நினைந்து, அந்தப் பெருமிழலைக் குறும்ப நாயனார், சிவ பெருமானுடைய திருவடிகளை இன்றைக்கே அடியேன். யோகத்தாள் போய்ச் சேருவேன்' என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்பவரானார். பாடல் வருமாறு : -