பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பெரிய புராண விளக்கம்.9

பிரணவ வாசல். தி ற ப்ப - தி ற க் க. மூ ல - எல்லாப் பொருள்களுக்கும் மூலமாகிய, முதல்வர் - முதல்வராகிய கைலாசபதியாருடைய. தி ரு ப் ப.ா த ம் - திருவடிகளை: ஒருமை பன்மை மயக்கம். அணைவார் - அடைபவராகி:

முற்றெச்சம். கயிலை - கயி ல | ய மலைக்கு. முன் - முன்னால். அடைந்தார் . அந்த நாயனார் போய்ச் சேர்ந்தார். . .

அடுத்து வரும் 11-ஆம் பாடல் இந்தப் பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணத்தில் உள்ள இறுதிப் பாடல். அதன் உள்ளுறை வருமாறு : -

தாம் பழகுதலைப் பொருந்திய யோக சக்தியினால் பரவை நாச்சியாருடைய க ன வ னா கி ய சுந்தர மூர்த்தியினுடைய திருவடிகளை அடைய. அவரோடு கயிலை மலையில் எழுந்தருளியிருக்கும் கயிலாச பதியாருடைய தி ரு வடி க ைள ப் போய்ச் சேர்ந்த பெருமிழலைக் குறும்ப நாயனாருடைய வெற்றிக் கழலைப் பூண்டு விளங்கும் திருவடிகளைப் பணிந்துவிட்டு, உயிலென்னும் பறவையை முதுகிடச் செய்யும் மென்மை யான சாயலைப் பெற்ற மாதரசியாரும், தாம் பேசும் வார்த்தைகள் யாழோடும் குயிலையும் ஒத்து விளங்கும் காரைக்கால் அம்மையாருடைய பெருமையை இனிமேல் அடியேம் பாடுவோம். பாடல் வருமாறு: ‘. . . . . .

பயிலைச் செறிந்த யோகத்தால் பரவை கேள்வன் பாதமுறக் கயிலைப் பொருப்பர் அடிஅடைந்த

மிழலைக் குறும்பர் கழல்வணங்கி மயிலைப் புறங்கொன் மென்சாயல்

மகளிர் கிளவி யாழினொடும் குயிலைப் பொருவும் காரைக்கால்

அம்மை பெருமை கூறுவாம் ' .'