பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம் 45

இது சேக்கிழார் அடுத்து வரும் காரைக்கால், அம்மையார் புராண த் தி ற் கு த் தோற்றுவாயாகப் பர்டியருளியது. பயிலை தாம் பலகாலும் பழகியதை. ச் : சந்தி, செறிந்த - பொருந் தி ய. யோகத்தால்அட்டாங்க யோக சக்தியினால், பரவை . பரவை நாச்சியாருடைய. கேள்வன் - க ன வ னா கி ய சுந்தர மூர்த்தியினுடைய. பாதம் - திருவடிகளை ஒருமை பன்மை மயக்கம். உற - அடைவதற்காக. க் : சந்தி. கயிலைப் பொருப்பர் - அவரோடு கயிலை மலையில் எழுந்தருளியிருக்கும் கயிலாச பதியாருடைய, அடி - திருவடிகளை ஒருமை பன்மை மயக்கம். அடைந்த போய்ச் சேர்ந் த. மிழலைக்குறும்பர் - பெருமிழலைக் குறும்ப நாயனாருடைய. கழல் - வெற்றிக் கழலைப் பூண்டு விளங்கும் திருவடிகளை; ஆகுபெயர். வணங்கி. பணிந்துவிட்டு. மயிலை - மயில் என்னும் பறவையை ப் : சந்தி. புறங்கொள் - மு. து.கி டச் செ ய்"யும். மென் - மென்மையாகிய, சாயல் - சாயலைப் பெற்ற மகளிர் - மாதரசியாரும். கிளவி - தாம் பேசும் வார்த்தைகள்: ஒருமை பன்மை மயக்கம். யாழினொடும். யாழை மீட்டி இசைக்கும் இனிய நாதத்தோடும்: ஆகுபெயர். குயிலை - குயிலின் கூவுதலை; ஆகுபெயர். பொருவும் - ஒத்து. விளங்கும். காரைக்கால் அம்மை - காரைக்கால் அம்மை யாருடைய. பெருமை - ெ ப ரு மை யை கூறுவாம் இனிமேல் அடியேம் பாடுவோம். .

ஆ பெண்களின் வார்த்தைகளுக்கு யாழ் உவமை :.. யோழின் மொழி உமையாள்.', யாழின் மொழி மாழை. விழி ஏழையின மாதினொடு. என்று திருஞானசம்பந்த, மூர்த்தி நாயனாரும், பாலை யாழ்மொழி யானவன்.' என்று திருநாவுக்கரசு நாயனாரும், யாழைப் பழித்தன்ன, மொழி மங்கை ஒரு பங்கன்." என்று சுந்தரமூர்த்தி நாயனாரும், நரம் பார்த்தன்ன இன்குரல் தொழுதி யொடு." என்று நக்கீரரும், யாழிலெழும் ஒசையுடன்