பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் அம்மையார் புராணம்

பெரிய புராணத்தில் 5 - ஆவதாக உள்ள திருகின்ற சருக்கத்தில் 4 ஆவதாக விளங்குவது காரைக்கால் அம்மையார் புராணம். அதில் உள்ள முதற் கவியின் உள்ளுறை வருமாறு : - --

பெருமை மிகுதியாக உள்ள அறத்தினுடைய நெறியில் நிலைத்து நின்று உண்மைகளைப் பேசுவதில் சிறிதேனும் குறைவு இல்லாத சீர்த்தியையும் பெருமையையும் பெற்று விளங்கிய வைசியர்களின் குடும்பங்கள் நெருங்கி வாழப் புகழோடு ஓங்கி நிற்கும் சிவத்தலம், வளைவாக உள்ள சங்குகளைக் கடலில் வீசும் அலைகள் சுமந்து கொண்டு கரைமேல் ஏறி நீர் மிகுதியாக உள்ள உப்பங்கழிகளைப் பெற்ற கடற்கரைச் சோலையின் மேல் வீசிவிட்டுக் குலாவு: கின்ற நீர் வளம், நில வளம், செல்வ வளம், ஆலய வளம், குடி வளம், நன்மக்கள் வளம் முதலிய வளங்கள் பெருகித் திகழும் செல்வர்கள் வாழும் காரைக்கால் ஆகும். பாடல். வருமாறு : - -

மானம்மிகு தருமத்தின் வழிகின்று வாய்மையினில் ஊனமில்சீர்ப் பெருவணிகர் குடிதுவன்றி ஓங்குபதி கூனல்வளை திரைசுமந்து கொண்டேறி மண்டுகழிக் கானல்மிசை உலவுவளம் பெருகுதிருக் காரைக்கால்.'

மானம் - பெருமை. மி கு = மிகு தி யாக உள்ள. தருமத்தின் - அறத்தினுடைய வழி - நெறியில். நின்று.