பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் அம்மையார் புராணம் as

புனிதவதியார் என்னும் பெண் குழந்தையார் இருவவதாரம் செய்தருளினார். பாடல் வருமாறு : - . . .

வங்கம்மலி கடற்காரைக்

காலின்கண் வாழ்வணிகர் தங்கள் குலத் தலைவனார்

தனதத்த னார்தவத்தால் அங்கவர்பால் திருமடங்தை

அவதரித்தாள் எனவந்து பொங்கியபேரழகுமிகப் - - புனிதவதி யார்பிறந்தார். வங்கம் - கப்பல்கள்: ஒருமை பன்மை மயக்கம். மலி - நிறைந்து மிதக்கும். கடல் - சமுத்திரத்தைப் பெற்ற. காரைககாவின் கண் - அந்தக் காரைக்காலில். வாழ் . தங்களுடைய வாழ்க்கைகளை நடத்திக் கொண்டு வரும். வணிகர் தங்கள் - வைசியர்களினுடைய ஒரும்ை பன்மை மயக்கம், தம் : அசை நிலை. குல - சாதிக்கு, த் : சந்தி. தலைவனார் - தலைமைப் ப த வி ைய வ-கி ப்ப வர். தனதத்தனார் - தன தத்தனார் என்னும் திருநாமத்தை. உடையவர். தவத்தால் - முற்பிறவியில் புரிந்த தவத்தின், பயனாக் ஆகுபெயர். அங்கு அந்தக் காரைக்காலில். அவர் பால் . அந்தத் தனதத்தனாரிடத்தில். திருமடந்தை. திருமடந்தையாகிய இலக்குமி தேவியே. அவதரித்தாள். திருவவதாரம் செய்தருளினாள். என என்று கூறுமாறு: இடைக்குறை. வந்து -அந்தக் காரைக்காலுக்கு வந்து. பொங்கிய - பொங்கி எழுந்த. பேரழகு - பெருமையும் வனப்பும். மிக - மிகு தியாக அமைய, ப்: சந்தி. புனிதவதியார் - புனிதவதியார் என்னும் பெண் குழந்தை. யார். பிறந்தார். திருவவதாரம் செய்தருளினார்.

அழகு உள்ள பெண்மணிக்குத் திருமகள் உவமை : :பங்கயச்செல்வி பாண்டிமா தேவி. என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், பெருந்திரு இமவான்