பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 - பெரிய புராண, விளக்கம் , 9

மல்குபெரும் பாராட்டின்

வளர்கின்றார் விடையவர்.பால் அல்கியஅன் புடன்அழகின்

கொழுந்தெழுவ தெனவளர்வார்."

பல் பல. பெரு - பெருமையைப் பெற்று விளங்கும். தல் நல்ல. கிளை - உறவினர்கள்; திணை மயக்கம்; ஒருமை பன்மை மயக்கம். உவப்ப - மகிழ்ச்சியை அடையு மாறு. ப் : சந்தி பயில் - தளர்நடை நடந்து பழகும். பருவபேதைப் பருவத்துக்கு உரிய. ச்: சந்தி. சிறப்பு-சிறப்புக்கள், ஒருமை பன்மை மயக்கம். எல்லாம் - எல்லாவற்றையும். அவையாவன: அன்னப்பிராசனம் செய்தல், கைகளுக்குக் காப்புக்களை அணிதல், மோதிரத்தை அணிதல், கால்களுக்குத் தண்டைகளையும், வெண்டயங்களையும் காப்புக்களையும் அணிதல், இடுப்புக்குத் தங்க அரைநாண் அணிதல், பாவாடை உடுத்தல் முதலியவை. செல்வம் - செல்வத்தில். மிகு - செழிப்புப் பெருகி வரும். தந்தை யார் - தம்முடைய த க ப் பன ர். திருப்பெருகும். செல்வச் செழிப்புப் பெருகிவரும். செயல் - செயல்களை; ஒருமை பன்மை மயக்கம். புரிய - செய்ய. மல்கு. நிரம்ப உள்ள பெரும் . பெருமையைப் பெற்றுத் திகழும். பாராட்டின் - தம்முடைய தந்தையாரும் அன்னையாரும், சுற்றத்தாரும் கூறும் பாராட்டு வார்த்தைகளோடு; ஒருமை பன்மை மயக்கம். வளர்கின்றார் - வளர்ந்து வருகிறவராகிய அந்தப் புனிதவதியார். விடையவர் பால் இடபவாகனத்தை ஒட்டுபவராகிய ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியாரிடத்தில். அல்கிய - தம்முடைய திருவுள்ளம் தங்கிய. அன்புடன் - பக்தியோடு. அழகின் . வனப்பினுடைய. கொழுந்து எழுவதென - கொழுந்து எழுந்து விளங்குகின்றது என்று கூறுமாறு. என : இடைக் குறை. வளர்வார் - வளர்ந்து வருபவரானார். . . . .

விடையவர்.பால் அன்பு: ; பிறந்து மொழி பயின்ற பின் பெல்லாம் காதல், சிறந்துநின் சேவடியே சேர்ந்தார்கள்.