பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் அம்மையார் புராணம் 55

நிறம் திகழும், மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே, எஞ்ஞான்று தீர்ப்ப திடர்.' என்று அந்த அம்மையாரே பாடியருளுவதைக் காண்க. -

பிறகு வரும் 5 - ஆம் பாடலின் கருத்து வருமாறு :

அந்தப் புனிதவதியார் மகளிருக்கு உரிய வினை பாட்டாகிய வண்டலைப் புரிந்து பழகியவை யாவும் தம்முடைய தலையில் தங்கும் பிறைச்சந்திரனை அணித் திருக்கும் சடாபாரத்தைத் தம்முடைய தலையின்மேற் பெற்றவரும், எல்லாத் தேவர்களுக்குத் தலைவருமாகிய ஊர்த்துவதாண்டவமூர்த்தியைப் புகழும் அழகிய மழல்ை மொழிகள் தம்மிடம் அடைய வருபவற்றைப் பேசிப் பழகி சிவபெருமானுடைய திருத்தொண்டர்கள் தம்முடைய திருமாளிகைக்கு எழுந்தருளினால், அந்தத் திருத்தொண்டர் களை அவர்களுடைய திருவடிகளில் விழுந்து வணங்கி விட்டு தம்முடைய வேலைக்காரிகள் வாழ்த்திப் பாராட்ட இரண்டு கொங்கைகளைக் கொண்ட இடுப்புத் தளரும் பக்குவத்தைப் பெற்ற மங்கைப் பருவத்தை அடைவதை சமீபித்தார். பாடல் வருமாறு :

வண்டல்பயில் வனவெல்லாம்

வளர்மதியம் புனைந்தசடை அண்டர்பிரான் திருவார்த்தை

அணையவரு வனபயின்று தொண்டர்வரில் தொழுதுதா

தியர்போற்றத் துணைமுலைகள் கொண்டதுசுப் பொதுங்குபதக்

கொள்கையினிற் குறுகினார். வண்டல் . அந்தப் புனிதவதியார் மகளிருக்கு உரிய விளையாட்டாகிய வண்டலை. புனிதவதியார்: தோன்றா எழுவாய். பயில்வன - புரிந்து பழகியவை. எல்லாம் . யாவும். வளர் - தம்முடைய தலையில் தங்கும். மதியம் . பிறைச்சந்திரனை. பு ைன ந் த - அணிந்துள்ள, சடை .