பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பெரிய புராண விளக்கம் - 9

சடாபாரத்தைத் தம்முடைய தலையின்மேற் பெற்றவரும்: ஆகுபெயர். அண்டர் - எல்லாத் தேவர்களுக்கும்; ஒருமை பன்மை மயக்கம். பிரான் - தலைவரும் ஆகிய; ஒருமை பன்மை மயக்கம், திருவார்த்தை - ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியைப் புகழும் அழகிய மழலை மொழிகள்: ஒருமை பன்மை மயக்கம். அணைய தம்மிடம் அடைய. வருவன - வருபவற்றை. பயின்று - பே சி ப் பழ கி. தொண்டர் ட் சிவபெருமானுடைய திருத்தொண்டர்கள்: ஒருமை பன்மை மயக்கம், வரில் - தம்முடைய திருமாளிகைக்கு எழுந் தருளி வந்தால். தொழுது - அந்தத் திருத்தொண்டர் களை அவர்களுடைய திருவடிகளில் விழுந்து வணங்கிவிட்டு. தாதியர் - பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு தம்முடைய வேலைக்காரிகள். போ ற் ற - வாழ்த்திப், பாராட்ட த் : சத்தி. துணை - இரண்டு. முலைகள் . கொங்கைகளையும். கொண்டதுசுப்பு - கொண்ட இடுப்பு. ஒதுங்கு - தளர்ச்சியை அடையும். பத பக்குவத்தைப் பெற்ற. க் சந்தி. கொள்கையினில் - கொள்ளுவதை: அடைவதை குறுகினார் சமீபித்தார்.

பிறகு உள்ள 6 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு :

"நல்லவை என்று அங்கங்களினுடைய இயக்கங்களை எடுத்துக் கூறும் சாத்திரமாகிய சாமுத்திரிகா சாத் திரத்தைப் பாடியவர் கூறும் அழகுகள் நிரம்பப் பெற்று மிகுதியாக அமைந்து பெருமையைப் பெற்ற அழகு மேம்பட்டு விளங்க வரும் மாண்பினால் தம்முடைய திரு. மாளிகையிலிருந்து கடந்து செல்லாத பெதும்பைப் பருவத்தை அந்தப் புனிதவதியார் அடைந்தபோது இவர் களுடைய வைசியர்களினுடைய பரம்பரைக்கு ஏற்றதாக விளங்கும் பழமையாகிய வணிகர்களின் சாதியில் திருவவ. "தாரம் செய்தருளிய புனிதவதியாரை மணமகளாகக் கொள்ளும் பொருட்டுப் பேசுவதற்கு ஆரம்பிப்பவர்கள் ஆனார்கள். பாடல் வருமாறு : . . . . . . . . . . . .