பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் அம்மையார் புராணம் 61

முதியவர்கள், அந்தப் புனிதவதியாரைப் பெற்றெடுத்த அன்னையார், தந்தையார் என்னும் இரண்டு பேர் களுடைய சம்மதித்த வார்த்தைகளைக் கேட்ட நீதிபதியும் உயர்ந்த சிறப்பைப் பெற்றவனைப் போல மகிழ்ச்சியை அடைந்து ஒப்பற்ற தன்னுடைய பெருமையைப் பெற்ற புதல்வியாகிய புனிதவதிக்குச் செல்வம் மிகுதியாகப் பெற்றிருக்கும் உறவினர்களோடு மகிழ்ச்சியை மிகுதியாக அடைந்து திருமணமாகிய மங்கல காரியத் தொழிலை மேற். கொண்டான். பாடல் வருமாறு :

மற்றவனும் முறைமையினால்

மணம் இசைந்து செலவிடச்சென் றுற்றவர்கள் உரைகேட்ட

நீதிபதியும் உயர்சிறப்புப் பெற்றனன்போல் உவந்துதணிப்

பெருமகட்குத் திருமலியும். சுற்றமுடன் களிகூர்ந்து

வதுவைவினைத் தொழில்பூண்டான்.'

மற்று : அசைநிலை. அவனும் - அந்தப் பரமதத் தனும். மு ைற ைம யி ன ல் , முறைமைப் படியினால். மணம் - தி ரும ண த் ைத. இ ைசந்து செய்வதற்குச் சம்மதித்து. செல. - போகுமாறு இடைக்குறை. விட்முதியவர்களை அனுப்ப. ச்: சந்தி, சென்று - அவர்கள் தனதத்தனாருடைய திரு மாளி கை க் கு ப் போய். உற்றவர்கள் - அடைந்த அந்த முதியவர்கள். உரை - அந்தப் புனிதவதியாரைப் பெற்றெடுத்த அன்னையார், தந்தையார் என்னும் இரண்டு பேர்களும் சம்மதித்துக் கூறிய வார்த்தைகளை ஒருமை பன்மை மயக்கம். கேட்ட நீதிபதியும் - கேட்ட அ ந் த நீ தி ப தி யும். உயர் - உயர்ச்சியையும். சிறப்பு - சி ற ப் ைபயும். ப் : சந்தி. பெற்றனன் போல் - பெற்றவனைப் போல. உவந்து மகிழ்ச்சியை அடைந்து, தனி - ஒப்பற்ற. ப் : சந்தி.