பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் அம்மையார் புராணம் . - ó战、

பரமதத்தனுக்கு உவம ஆகுபெயர். க் : சந்தி, களி - களிப்பையும். மகிழ் - மகிழ்ச்சியையும் பெற்று விளங்கும்.

சுற்றம் . உறவினர்கள்; தி ைண ம ய க்கம். போற்ற- - . வாழ்த்திப் ப ா ரா ட்ட க் சந் தி, கலியாணம் - திருமணத்தை. செய்தார்கள் - த ன த த் த னா ரு ն அவருடைய பத்தினியாரும் புரிந்து வைத்தார்கள். ... --

பிறகு வரும் 12-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு : . . . . . மங்கல காரியமாகும் திருமணத்துக்கு உரிய காரியங்.

களை நிறைவேற்றிவிட்டு இயல்போடு காரைக்காலில் தங்கிக் கொண்டிருக்கும் காலத்தில் தங்களுடைய குடும்பத். திற்கு அருமையாக விளங்கும் புதல்வி புனிதவதி ஆகை யினால் தனதத்தன் பொங்கி எழும் முழக்கத்தை எழுப்பும் சமுத்திரத்தில் நிரம்பிய நீரைப் பெற்ற நாகப்பட்டினத். திற்குச் செல்லாமல் தம்முடைய கணவனாகிய பரமதத் தனோடு அந்தக் காரைக்காலில் தங்கிக்கொண்டிருந்து, இனிமையோடு வாழ்ந்திருப்பதற்காக அழகைப் பெற்ற ஒரு மாடத்தைத் தன்னுடைய திருமாளிகைக்குப் பக்கத்தில் கட்டுவித்து அமைத்தான். பாடல் வருமாறு : .

மங்கலமா மணவினைகள்

முடித்தியல்பின் வைகும்.கான் தங்கள்குடிக் கரும்புதல்வி

ஆதலினால் தனதத்தன் பொங்கொலிநீர் நாகையினிற்

போகாமே கணவனுடன் அங்கண்அமர்க் திணிதிருக்க - அணிமாடம் மருங்கமைத்தான்.' மங்கலம் - மங்கல காரியம். ஆம் ஆகும். மண. திருமணத்துக்கு உரிய வினைகள் - காரியங்களை. முடித்து - செய்து நி ைற ே வ ற் றி விட் டு. இயல்பின் . தனக்கு உரிய இயல்போடு. வைகும் - காரைக்காலில் தங்கிக் கொண்டிருக்கும். நாள் - காலத்தில். தங்கள் - தங்களுடைய, குடிக்கு - குடும்பத்திற்கு அரும் - அருமை