பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-ฮs பெரிய புராண விளக்கம் து

யாக விளங்கும். புதல்வி - மகள் புனிதவதி. ஆதலினால். ஆகையினால், தனதத்தன் - புனித வதி யா ரு ைடய தந்தையாகிய தனதத்தன். பொங்கு - பொங்கி எழும். ஒலி - முழக்கத்தை எழு ப் பு ம். நீ ர் - சமுத்திரத்தில் .திரம்பிய புனலைப் பெற்ற. நாகையினில் - நாகப்பட்டினத் .திற்கு உருபு மயக்கம். போ கா மே - செல்லாமல். கணவனுடன்-தம்முடைய கணவனாகிய பரமதத்தனோடு. அங்கண் - அந்தக் காரைக்காலில், அமர்ந்து . தங்கிக் கொண்டிருந்து. இனிது - இ னி மை யோ டு. இருக்க - வாழ்ந்து கொண்டிருக்க. அணி - அலங்காரத்தைப் பெற்ற: "அழகைப்பெற்ம’ எனலும் ஆம். மாடம் - ஒரு மாடத்தை. மருங்கு - தன்னுடைய திருமாளிகைக்குப் பக்கத்தில். அமைத்தான் தனதத்தன் கட்டுவித்து அமைத்தான்.

o பிறகு உள்ள 13 - ஆம் பாடலின் கருத்து வருமாறு :

அந்தத் தனதத்தன் தன்னுடைய புதல்வியாகிய புனிதவதியைப் பரமதத்தனுக்குத் திருமணம் செய்து ”கொடுத்த கொடையினால் மகிழ்ச்சியில் சிறந்து விளங்கும் எல்லை இல்லாத செல்வத்தை அந்தப் புனிதவதியாருக்கு வழங்கியதற்குப் பிறகு சமானம் சொல்லுதற்கு அருமை யாக உள்ள பெருமையைப் பெற்று விள்ங்கும் சிறப்பைப். பெற்ற செல்வத்துக்கு அதிபதியாகியவனுடைய விருப்பத் தினால் அந்தப் புனிதவதியர் தங்கி வாழும் .திருமாளிகையில் செல்வ வளத்தைப் பெருக உண்டாக்கி வைத்து மிகுதியாகச் செய்யும் கோட்பாட்டில் மேம் பாட்டைப் பெற்று விளங்குதலை அந்தத் தனதத்தன் அடைந்தான். பாடல் வருமாறு : |

1 மகட்கொடையின் மகிழ்சிறக்கும்

. வரம்பில்தனம் கொடுத்ததற்பின்

நிகர்ப்பரிய பெருஞ்சிறப்பில்

திெபதிதன் குலமகனும் தகைப்பில்பெருங் காதலினால்

தங்குமனை வளம்பெருக்கி