பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் அம்மையார் புராணம் «7

மிகப்புரியும் கொள்கையினில், மேம்படுதல் மேவினான்.'

மகள் - அந்தத் தனதத்தன் தன்னுடைய புதல்வி யாகிய புனிதவதியை. கொடையின் - பரமதத்தனுக்குத் திருமணம் செய்து கொடுத்த கொடையினால், மகிழ் . மகிழ்ச்சியில், சிறக்கும் - சிறந்து விளங்கும். வரம்பு . எல்லை. இல் - இல்லர்த: கடைக்குறை, தனம் . செல்வத்தை. கொடுத்ததற் பின் - அந்தப் புனிதவதி யாருக்கு வழங்கியதற்குப் பிறகு. நிகர்ப்பு - சமானமாகச் சொல்வதற்கு. அரிய - அருமையாக உள்ள பெரும் - பெருமையைப் பெற்று விளங்கும். சிறப்பில் . சிறப்பைப் பெற்ற நிதிபதிதன் - செல்வத்துக்கு அதிபதியாகிய வனுடைய. தன் : அசைநிலை, குல - நல்ல குலத்திற் பிறந்த மகனும் - புதல்வனும், தகைப்பு - தடுத்தல். இல் - இல்லாத கடைக்குறை. . பெரும் - பெருமையைப் பெற்று விளங்கும். காதலினால் - விருப்பத்தோடு, உருபு மயக்கம். தங்கும் - தன்னுடைய புதல்வியாகிய புனிதவதி தங்கி வாழும். மனை - திருமாளிகையில். வளம் - செல்வ வளத்தை. பெருக்கி - பெருகச் செய்து. மிக மிகுதியாக. ப்: சந்தி. புரியும் - செய்யும். கொள்கையினில் - கோட் பாட்டில், மேம்படுதல் - மேம்பாட்டைப் பெற்று விளங்கு தலை. மேவினான் . அந்தத் தனதத்தன் அடைந்தான்.

பிறகு வரும் 14-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு :

"அந்த நாகப்பட்டினத்தில் அந்தப் பரமதத்தனுடைய இல்லற வாழ்க்கைக்கு அருமையாக விளங்கும் வாழ்க்கைத் துணையாகிய மனைவியாகி விரும்பி வாழ்கின்ற மலர்களை அணிந்துகொண்டிருக்கும் கூந்தலை உடைய. அந்த மாதரசியாரும் போர் புரியும் இடபவாகனத்தை ஒட்டுபவராகிய ஊர்த்துவ தாண்டிவ மூர்த்தியினுடைய திருவடிகளின் கீழே ஓங்கி எழுந்த பக்தி உண்டாகிய விருப்பம் ஒழிவே இல்லாமல் மிகுதியாகப் பெருகி கிண்டாகப் பக்குவத்தோடு அமைந்துவரும் இல்லற