பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 பெரிய புராண விளக்கம். 9

வாழ்க்கைக்குரிய தருமங்களினுடைய பண்பு தவறாமல் இருக்குமாறு அந்தப் புனிதவதியார் பழகுபவரானார்." பாடல் வருமாறு :

ஆங்கவன்தன் இல்வாழ்க்கை

அருந்துணையாய் அமர்கின்ற பூங்குழலார் அவர்தாமும்

யொருவிடையார் திருவடிக்கீழ் ஓங்கியஅன் புறுகாதல்

ஒழிவின்றி மிகப்பெருகப் பாங்கில்வரும் மனைஅறத்தின்

பண்புவழா மையில்பயில்வார்." ஆங்கு - அந்த நாகப்பட்டினத்தில். அவன்தன் . அந்தப் பரமதத்தனுடைய தன் : அசைநிலை. இல் இல்லற வாழ்க்கை - வாழ்க்கைக்கு. அரும். அருமையாக விளங்கும். துணையாய் - வாழ்க்கைத் துணையாகிய மனைவியாகி. அமர்கின்ற விரும்பி வாழ்கின்ற. ஆம் * மலர்களை ஒருமை பன்மை மயக்கம். குழலார் - அணிந்து கொண்டிருக்கும் கூந்ததைப் பெற்றவர் ஆகிய. அவர் தாமும் . அந்த மாதாசியாரும். தாம் : அசை நிலை. அந்த மலர்களாவன : வெள்ளைச் செவ்வந்தி மலர், மஞ்சட்செவ்வந்தி மலர், குண்டுமல்லிகை மலர், மல்லிசை மலர், ஊசிமல்லிகை மலர், முல்லை மலர், இருவாட்சி மலர், செந்தாமரை மலர், வெண்டாமரை மலர், ஆம்பல் மலர், அல்லி மலர், நீலோற்பல மலர், செங்கழுநீர் மலர் குமுத மலர், மகிழ மலர் முதலியவை. பொரு - போரைப் புரியும். விடையார் - இடப வாகனத்தை ஒட்டுபவராகிய ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியினுடைய. திருவடிக்கீழ் திருவடிகளின் கீழே: ஒருமை பன்மை மயக்கம். ஓங்கிய ஓங்கி எழுந்த: அன்பு - பக்தி, உறு பெற்ற உண்டாகிய எனலும் ஆம். காதல் - விருப்பம். ஒழிவு - ஓர் ஒழிவே இன்றி - இல்லாமல், மிக - மிகுதியாக, ப் : சந்தி. பெருக, பெருகி உண்டாக: பெருகி எழ' எனலும் ஆம். ப் : சந்தி