பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் அம்மையார் புராணம் 69

பாங்கில் - பக்குவத்தோடு: உருபுமயக்கம். வரும் - அமைந்து வரும். மனை அறத்தின் - இல்லற வாழ்க்கைக்கு உரிய, பண்பு - நல்ல குணம், வழாமையில் - தவறாமல் இருக்குமாறு பயில்வார் . அந்தப் புனிதவதியார் பழகுப வரானார் . - - -

பிறகு உள்ள 15 - ஆம் கவியின் உள்ளுறை வ்ருமாறு : “தம்முடைய அடியவர்களுக்குப் பல வி த மா ன நம்பிக்கைகளை உண்டாக்குபவராகிய ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியினுடைய அடியவர்கள் தம்முடைய திருமாளி கைக்கு எழுந்தருளினால் அந்த அடியவர்க்கு நல்ல திரு அமுதை வழங்கியும், சிவந்த நிறத்தைப் பெற்ற தங்கக் காசுகளையும், முத்து, பவளம், பதுமராகம், புட்பராகம், கோமேதகம், மரகதக்கல், நீலமணி, வைரம், வைடூரியம் என்னும் ஒன்பது இரத்தினங்களையும் செழுமையாகிய மெல்லிய ஆடையையும் முதலாக உள்ளவற்றைத் தம்முடைய பக்தியினால் அந்த அ டி. ய வ ர் க ளு க் கு தகுதியோடு வேண்டும் பண்டங்களை வழங்கியும் எல்லாத் தேவர்களுக்கும் தலைவனாகிய ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியினுடைய திருவடிகளின் கீழே உணர்ச்சி மிகுதியாக உண்டாகுமாறு அந்தப் புனிதவதியார் நடந்து வரும் காலத்தில். பாடல் வருமாறு :

" கம்பர் அடி யார் அணைந்தால் கல்லதிரு அமுதளித்தும் செம்பொன்னும் நவமணியும் செழுந்துகிலும் முதலான தம்பரி.வி னால் அவர்க்குத் . . . . தகுதியின்வேண் டுவகொடுத்தும் உம்பர்பிரான் திருவடிக்கீழ் -

உணர்வுமிக ஒழுகும்நாள். ' இந்தப் பாடல் குளகம். நம்பர்- தம்முடைய அடியவர் களுக்குப் பலவகையான் நம்பிக்கைகளை உண்டாக்கு

பெ. புரா - 9 - 5 - -