பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 - பெரிய புராண விளக்கம் - 9

பவராகிய ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியினுடைய. அந்த நம்பிக்கைகள் இன்ன என்பதை வேறு ஓரிடத்தில் கூறினோம்: ஆண்டுக் கண்டுணர்க. அடியார்-அடியவர்கள்: ஒருமை பன்மை மயக்கம். அணைந்தால் - தம்முடைய திருமாளிகைக்கு எழுந்தருளி வந்தால். நல்ல - நல்லதாகிய, திருஅமுது - திருஅமுதை சோற்றை. அளித்தும் - வழங்கியும்; படைத்தும். செம் - சிவப்பாக இருக்கும். பொன்னும் - தங்கக் காசுகளையும்; ஆகுபெயர்: ஒருமை பன்மை மயக்கம். நவமணியும் - முத்து, பவளம், பதும ராகம், புட்பராகம், கோமேதகம், மரகதக்கல், நீலமணி. வைரம், வைடுரியம் என்னும் ஒன்பது இரத்தினங்களையும்: ஒருமை பன்மை மயக்கம் செழும் - செழுமையாகிய, துகிலும் - மெல்லிய ஆடையையும். முதலான - முதலாக உள்ளவற்றை. தம் - தம்முடைய. பரிவினால்-பக்தியினால். அவர்க்கு - அந்த அடியவர்களுக்கு ஒருமை பன்மை மயக்கம். த்: சந்தி. தகுதியின் - தகுதியோடு. வேண்டுவ . விரும்பும் பண்டங்களை. அவையாவன: செல்வம், திருநீறு, உருத்திராக்க மாலை, திருவமுது, ஆசனப்பலகை, புதிய ஆடைகள், பாத்திரங்கள், கையலம்ப நீர்வைக்கும் செம்பு, கால் அலம்ப நீர் வைக்கும் செம்பு, வாயைத் துடைத்துக்கொள்ள ஆடை, காலைத் துடைத்துக்கொள்ள ஆடை, உடுத்துக் கொள்ளச் சரிகை வேட்டி, அங்க

வஸ்திரம், பலவகை ஆபரணங்கள் முதலியவை. கொடுத்தும் - வழங்கியும். உம்பர் - எல்லாத் தேவர் களினுடைய: ஒருமை பன்மை மயக்கம். பிரான் -

தல்ைவனாகிய ஊர்த்துவ தாண்டிவ மூர்த்தியினுடைய. திருவடிக் கீழ் - திருவடிகளின் கீழே; ஒருமை பன்மை மயக்கம். உணர்வு - உணர்ச்சி. மிக - மி கு தி யாக உண்டாகுமாறு. ஒழுகும் - ந - ந் து வரும். நாள் - காலத்தில், -

பிறகு வரும் 16 - ஆம் பர்ட்லின் கருத்து வருமாறு: