பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் அம்மையார் புராணம் 71

பக்குவத்தைப் பெற்ற வழியில் பயின்று பழகும் புனிதவதியாருடைய கணவனாகிய பரமதத்தனுக்கு மாம்பழங்கள் ஓரிரண்டு பழங்கள் அந்தப் பரமதத்தனிடம் வந்து சேர்ந்த மக்கள் சில பேர்கள் வழங்க அவ்வாறு அவற்றைத் தான் முன்னால் வாங்கிக்கொண்டு அந்த மாம்பழங்களைக் கொடுத்த மக்கள் விரும்பும் விலையைக் கொடுத்துவிட்டு இந்த மாம்பழங்களை என்னுடைய திருமாளிகைக்கு எடுத்துச் சென்று கொடுப்பாயாக’, என்று அந்தப் பரமதத்தன் கூறினான்." பாடல் வருமாறு :

பாங்குடைய நெறியின்கட் பயில்பரம தத்தனுக்கு மாங்கனிகள் ஓரிரண்டு

வந்தணைந்தார். சிலர் கொடுப்பு ஆங்கவைதான் முன்வாங்கி

அவர்வேண்டும் குறையளித்தே :ஈங்கிவற்றை இல்லத்துக்

கொடுக்க' என இயம்பினான். ' - பாங்கு - பக்குவத்தை. உடைய பெற்ற. நெறியின் கண் - வழியில். பயில் - பயின்று பழகும். பரமதத்தனுக்கு - புனிதவதியாருடைய கணவனாகிய பரமதத்தனுக்கு. மாங் க ரிை க ள் - மாம்பழங்கள். ஒ ரி ர ண் டு . ஒரிர ண் டு மாம்பழங்கள். வந்து - அந்தப் பரமதத்தனிடம் வந்து. அணைந்தார் - சேர்ந்த மக்கள்: ஒருமை பன்மை மயக்கம். சிலர் - சில பேர்கள்: ஒருமை பன்மை மயக்கம். கொடுப்பவழங்க. ஆங்கு - அவ்வாறு. அவை - அவற்றை. தான்' என்பது பரமதத்தனை. முன் - முன்னால், வாங்கி - வாங்கிக் கொண்டு. அவர் அந்த மாம்பழங்களைக் கோடுத்த மக்கள்: ஒருமை பன்மை மயக்கம். வேண்டும் - பெற விரும்பும். குறை - விலையை அளித்து - வழங்கி விட்டு. ஏ அசைநிலை, ஈங்கு - இந்த இடத்தில் யான் பெற்ற, இவற்றை - இந்த மாம்பழங்களை. இல்லத்து - என்னுடைய திருமாளிகைக்கு எடுத்துச்சென்று. கொடுக்க.